Don't Miss!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் சீசன் 2.. யாரெல்லாம் வாங்கியிருக்காங்க?
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அட்லீ, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு ரேடியோ சிட்டி சினி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் வானொலியான ரேடியோ சிட்டி சினி விருதுகளை இரண்டாவது முறையாக வழங்கியது. முதல் சீசனில் வெறும் 70 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் இந்த இரண்டாவது சீசனில் எதிர்பார்ப்புகளை தாண்டி 1.2 கோடி வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் திரைப்படத்துறையிர் சிறந்த பங்களிப்பிற்காக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் முயற்சிகளை பாராட்டும் வகையில் அதன் ரசிகர்களால் தேர்வு செய்யப்படுவதாகவும்.
விருதுகளை வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. ஏர் ஆர் ரஹ்மான் சிறந்த ஆண் பின்னணி பாடகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார். சிறந்த இயக்குனர் விருதை அட்லி பெற்றார். ஷக்திஸ்ரீ கோபாலன் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதை வென்றார். நடிகர் விஜய் சிறந்த ஹீரோவுக்கான விருதை பெற்றார்.
ரேடியோ சிட்டி சினி விருதுகள் ரேடியோ சிட்டி கேட்பவர்களுக்கும் அவற்றின் விருப்பமான நட்சத்திரங்களுக்கும் இடையில் ஒரு இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாகும்.
பிடித்த ஹீரோ, பிடித்த ஹீரோயின், பிடித்த திரைப்பட இயக்குநர், பிடித்த திரைப்படம், பிடித்த இசையமைப்பாளர், பிடித்த ஆண் பின்னணி பாடகர், பிடித்த பெண் பின்னணி பாடகர் , பிடித்த நகைச்சுவை நடிகர், பிடித்த துணை நடிகர், பிடித்த துணை நடிகை, சிறந்த அறிமுக கலைஞர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளுக்கு கடந்த ஜூலை கடைசி வாரத்தில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மக்கள் பல்வேறு வகைகளின்கீழ் தங்களுக்கு விருப்பமான பிரபலங்களை ஆதரித்து வாக்களித்தனர்.
ரேடியோ சிட்டி சினி விருதுகளுக்கான பொது வாக்களிப்பு தமிழ் சீசன் 2 சினி விருதுகள் மைக்ரோசைட் www.radiocity.in/ccatamil, எஸ்எம்எஸ், வாக்கு பெட்டிகள், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் நடத்தப்பட்டது. ரேடியோ சிட்டி சினி விருதுகள் சீசன் 2 விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 14, 2018 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை மீண்டும் ஒளிப்பரப்படவுள்ளது.