சென்னை மக்களே ரெடியா? நெக்சஸ் விஜயா மாலில் இன்று நடக்கும் ரேடியோ சிட்டி சூப்பர் சிங்கர் இறுதி போட்டி

சென்னை: இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட முன்னணி ரேடியோ நிறுவனமான ரேடியோ சிட்டி எப்.எம் இந்த ஆண்டிற்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்திய அளவில் பாடும் திறமைகளை வெளிக் கொண்டுவரும் நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி 14 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Radio City FMs Super singer 15th season finals happening in chennai, Madurai & Kovai

தற்போது 15வது சீசனில் நுழைந்துள்ளது. இதன் இறுதிப்போட்டி சென்னை, கோவை மற்றும் மதுரையில் அடுத்தடுத்து நடக்கவுள்ளது.

ரேடியோ சிட்டியின் சூப்பர் சிங்கர் 15 இறுதிப்போட்டி: இந்தியாவின் முன்னணி எப்.எம்மான ரேடியோ சிட்டி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிறுவனமாக இருந்து வருகிறது. பல நிகழ்ச்சிகளை ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கொடுத்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த எப்.எம் ரேடியோவில் ரசிகர்களை கவரும்வகையில் பொழுது போக்கு செய்திகள், பாடல்கள் உள்ளிட்ட இசை தொடர்பான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகிறது.

குறிப்பாக காலை வேளைகளில் இந்த எப்.எம் மூலம் ஒலிபரப்பாகிவரும் பாடல்கள், ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வருகின்றன. இதையொட்டி பல நிகழ்ச்சிகளும் சிறப்பான வகையில் ஒலிபரப்பாகி வருகின்றன. இந்த எப்.எம்மின் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி காணப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியின் 14 சீசன்கள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் சிறப்பான குரல் ஆளுமைகளை இந்த நிகழ்ச்சி வெளிக் கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் 15வது சீசன் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பான நடுவராக ஏராளமான திறமைகளை வெளிக்கொண்டுவந்துள்ள பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் கைலாஷ் கெர், இந்த ஆண்டும் நடுவராக செயல்படவுள்ளார். இவரின் பங்களிப்பால் பங்கேற்பாளர்கள், இசை நுணுக்கங்களை சிறப்பான வகையில் கற்றுக் கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இசைப் பயணத்தில் நான்காவது ஆண்டாக இணைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கைலாஷ் கெர், வளரும் திறமைகளை தன்னம்பிக்கை கொண்ட கலைஞர்களாக மாற்றுவதற்கு இந்த நிகழ்ச்சி சிறப்பான களமாக உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியை மட்டுமில்லாமல் திருப்தியையும் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சிக்கான அப்ளிகேஷன் கடந்த 3ம் தேதி முதல் 12ம் தேதிவரை பெறப்பட்டன.

இதில் லட்சக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட நிலையில், இசை பரிசீலிக்கப்பட்டு இந்த சீசனின் இறுதிப்போட்டிகள் நாளை முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை, மதுரை கோவை போன்ற இடங்களில் இதன் இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னையில் இன்றைய தினம் நெக்சஸ் விஜயா மாலில் மாலை 6 மணி முதல் நடக்கவுள்ளது. இதேபோல கோவையில் ப்ரோசோன் மாலிலும் நடக்கவுள்ளது. இதேபோல நாளைய தினம் மதுரை விஷால் டே மாலில் மாலை 6 மணிக்கு துவங்கி நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இந்த நிகழ்ச்சியின் நடுவராக பிரபல இசையமைப்பாளர் சாய் சரணும், சென்னை மற்றும் கோவையில் முறையே நிவாஸ் கே பிரசன்னா மற்றும் விஷால் சந்திரசேகரும் இணைந்துள்ளனர்.

ஒவ்வொரு இடத்திலிருந்தும் முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் ரேடியோ சிட்டி சார்பில் கூறப்பட்டுள்ளது. இசை திறமைகளுக்கு வழிகாட்டும் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் ஒலி வடிவத்தில் அவர்களின் திறமைகளை சிறப்பான வகையில் வெளிக் கொண்டு வரும் பணியை கடந்த 15 ஆண்டுகளாக ரேடியோ சிட்டி செய்து வருவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X