'லைட் பச்சக்' மட்டும்தான்.. 'கஞ்சா'வுக்கு ரகஸ்யா போட்ட கண்டிஷன்...!
சென்னை: கஞ்சா கருப்புவின் உதடுகள் ரொம்பவே வாடிப் போய் வதங்கிக் காணப்படுகிறதாம். இருக்காதா பின்னே.. அவரது வாய் வரைக்கும் வந்த ரகஸ்யா, அதற்கு மேல் நகர மறுத்து, லிப் டூ லிப் கொடுக்க மறுத்தால், விசனம் வராமலா இருக்கும்....!
கஞ்சா கருப்பு தயாரித்து, நடிக்கும் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில்தான் இந்த வருத்தக் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.
கஞ்சா கருப்புக்கு முத்தம் கொடுக்கத் தயார், ஆனால் சின்னதாகத்தான் கொடுப்பேன். லிப் டூ லிப்பெல்லாம் ம்ஹூம் என்று கூறி விட்டாராம் ரகஸ்யா.

சிரிச்சு வந்த சீனா தானா....
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம்தான் ரகஸ்யாவுக்கு தமிழ் சினிமாவில் ரசனையான பாட்டையைப் போட்டுத் தந்தது. அதில் அவர் ஆடிய சிரிச்சு சிரிச்சு வந்த சீனா தானா அப்போது செமத்தியான ஹிட்டடித்தது.

அடுத்தடுத்து குவிந்த ஐட்டங்கள்
அந்தப் பாட்டைத் தொடர்ந்து நிறைய குத்துப் பாட்டுகளுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருந்தார் ரகஸ்யா.

புஸ்ஸுன்னு போச்சே..
ஆனால் வந்த வேகத்திலேயே ஜெர்க் ஆகி மும்பைக்கே ரிட்டர்ன் ஆகி விட்டார் ரகஸ்யா.. ஏன் என்னாச்சு என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை.

கருணாஸின் ரகளபுரத்தில் ரிட்டர்ன்...
இருப்பினும் கருணாஸ் மூலம் மீண்டும் மறுவாழ்வு கிடைத்தது. ரகளபுரம், சந்தமாமா ஆகிய இரு படங்களிலும் குத்துப் பாட்டுக்கு ஆடி வைத்தார் ரகஸ்யா.

கஞ்சா நாயகி
இந்த நிலையில் கஞ்சா கருப்பு தயாரிப்பில் உருவாகும் வேல்முருகன் போர்வெல் படத்தில் அவருக்கு நல்ல வாய்ப்பு வந்தது.. முதலில் ஹீரோ யார் என்று தெரியாமல்தான் ஓகே செய்தாராம்.. வந்த பிறகுதான் கதை நாயகன் கஞ்சா என்று தெரிய வந்து சற்றே திடுக்கிட்டாராம்.

பரவால்ல...
இருப்பினும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நடிக்க ஆரம்பித்தார்.

குண்டைப் போட்ட கோபி....
இந்த நிலையில்தான் படத்தின் இயக்குநர் கோபி ஒரு நாள் ரகஸ்யாவிடம் வந்து... அதாவது ஒரு முக்கியமான சீன் இருக்கு.. நடிக்கனும்.. என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

லிப் லாக் பண்ணனுமே...
என்ன என்று ஆர்வத்துடன் ரகஸ்யா கேட்க, நீ்ங்களும் கஞ்சாவும் லிப் லாக் கொடுத்துக் கொள்ள வேண்டும்.. அதுதான் என்று நிறுத்தினார் கோபி..

வாட்... நோ...
இதைக் கேட்டு டென்ஷனான ரகஸ்யா, லிப் லாக்கா.. சான்ஸே இல்லை. கஞ்சாவுக்கு வாயைக் கொடுக்க வாய்ப்பே இல்லை...என்று கூறி கிட்டத்தட்ட ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பி விட்டாராம்.

சரி சரி... சிரி சிரி....
இதனால் அதிர்ச்சியாகிப் போன கோபி, இவரையும் விட்டால் வேறு நாயகியைப் பிடிப்பது ரொம்பக் கஷ்டம் என்பதால் ரகஸ்யாவை அழைத்து சமாதானப்படுத்தி அமைதிப்படுத்தினாராம்.

லைட்டா.. ஓ.கே.
அந்த சமரசத்தின்படி கஞ்சா கருப்புக்கு சின்னதாக ஒரு முத்தம் மட்டும் தருவேன் என்று கூறியுள்ளாராம் ரகஸ்யா.
இப்பச் சொல்லுங்க கஞ்சா கவலை நியாயம்தானே....!


Click it and Unblock the Notifications











