Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீடு.. எப்ப எங்கே நடக்குது தெரியுமா?
சென்னை: நடிகர் ராகவா, கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2 படம்.
இந்தப் படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாவுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீடு: நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என முன்னணி நடிகர்கள் இணைந்து உருவாகியிருந்த சந்திரமுகி படம் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது. மலையாளத்தில் ஷோபனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருந்த மணிசித்திரத் தாழ் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்தப் படத்தில் ரஜினிக்காக மாற்றங்களை ஏற்படுத்தி உருவாக்கியிருந்தார் இயக்குநர் பி வாசு. படம் வெளியாகி 200 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இந்தப் படம் சூப்பர் ஹிட்டான நிலையில், ரஜினி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்த அனைவருக்கும் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மைசூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அரண்மனைகளிலும் அரண்மனை செட் அமைத்தும் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து வரும் செப்டம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் முன்னதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.
முன்னதாக படத்தில் ராகவாவின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் இசை வெளியீடு வரும் 25ம் தேதி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. லிரிக் வீடியோ பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் ராகவாவின் அதிரடி ஆட்டத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் டைட்டில் பாடலாக அமைந்துள்ளது. முதல் பாடலாக கிளாசிகல் பாடலை கொடுத்துள்ள கீரவாணி, இந்தப் பாடலை அதிரடியாக கொடுத்துள்ளார். அடுத்தடுத்து இரு பாடல்களை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இன்னும் சில தினங்களில் இசை வெளியீட்டையும் நடத்தவுள்ளது.


Click it and Unblock the Notifications











