Chandramukhi 2: வெளியானது சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்.. க்யூட் கங்கணா டான்ஸ்.. மியூசிக் பின்னுதே!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு கங்கணா ரனாவத், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இயக்கியுள்ளார்.

படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி மிரட்டிய நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல் ரிலீஸ்: நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என முன்னணி நடிகர்கள் நடிக்க கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி. நடிகர் ரஜினிக்கு மட்டுமில்லாமல் படத்தின் நடிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக அமைந்தது. இந்தப் படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா மிரட்டிய நிலையில் துர்காவாக ரசிகர்களை கூல் செய்தார் நயன்தாரா.
வடிவேலுவுடன் சரிக்கு சரியாக நின்று ரஜினியும் இந்தப் படத்தில் காமெடி கலாட்டாக்களை செய்திருந்தார். படம் காமெடி, ஆக்ஷன், மிரட்டல், சென்டிமெண்ட் என பல தளங்களிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தை பிரபல இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார். ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கியுள்ளார்.
வரும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் திரைப்படமாக ரிலீசாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சாங் சூட்டிங்கிற்காக வெளிநாடு சென்ற புகைப்படங்களை மஹிமா தன்னுடை வலைதள பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார். மைசூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரண்மனைகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தப் படத்தின் பிரமோஷனை படக்குழு சிறப்பாக நடத்தி வருகிறது. நடிகர் ராகவா, கங்கணா ரனாவத் ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை லைகா நிறுவனம் தனது வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் ரா ரா சரசக்கு ராரா என்று ஜோதிகா ஆடியதை போலவே இந்த பாகத்திலும் பாடல் ஒன்று ரசிகர்களை மயக்கும்வகையில் அமைந்துள்ளது.
ஆஸ்கர் நாயகன் கீரவாணியின் இசையமைப்பில் இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் சந்திரமுகி 2, தூக்கமில்லாத பல இரவுகளை கொடுத்துள்ளதாக கீரவாணி தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் தன்னுடைய உழைப்பை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சுவாகத்தாஞ்சலி என்ற பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலில் மிகவும் அழகாக, இளவரசி லுக்கில் காணப்படுகிறார் கங்கணா. ஏராளமான துணை நடிகைகள் சூழ அழகாக அரண்மனை செட்டப்பில் ஆடுகிறார். இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் கலா மாஸ்டர். இந்நிலையில் இந்த லிரிக் வீடியோவின் இடையில் ராகவா இளவரசன் கெட்டப்பில் மிரட்டலாக வந்து போகிறார். படைவீரர்களுடன் சண்டையிடும் காட்சிகளும், சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட காட்சிகளும் இந்த பாடலில் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











