டிஜிட்டல் போட்டி கடுமையா இருக்கே..? ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறதா, ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள படம்?
சென்னை: ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்த படம், காஞ்சனா. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.
இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம், இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

அமிதாப் பச்சன்
இதில் அக்ஷய்குமார் ஹீரோ. கியாரா அத்வானி ஹீரோயின். தமிழில் இயக்கிய ராகவா லாரன்ஸ், இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழில் திருநங்கை கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்தார். இந்தியில் அந்த கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அக்ஷய் குமாரே நடித்துள்ளார்.

ஷூட்டிங் முடிந்தது
இந்தப் படத்தை குட் பிலிம்ஸ், பாக்ஸ்டார் ஸ்டூடியோஸ், துஷார் கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இதை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷபினா கான் தெரிவித்தார். இந்தப் படத்தை மே மாதம் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் மொத்த திட்டத்தையும் மாற்றி வைத்துவிட்டது.

தியேட்டர்கள்
இந்நிலையில் இந்த படத்தை டிஜிட்டலில் நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இதனால் ரெடியான படங்களை நேரடியாக டிஜிட்டலில் வெளியிட தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.

பேச்சுவார்த்தை
அதன்படி இந்தப் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹாட்ஸ்டார் நிறுவனம் லக்ஷ்மி பாம் பட தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் சில டிஜிட்டல் நிறுவனங்களும் படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் வெளியீடு
'படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை. படம் ரெடியாக ஜூன் மாதம் ஆகும். அதற்கு பிறகு ஆன்லைனில் வெளியிட வாய்ப்பிருக்கிறது' என்று படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம், அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











