இதுதான் புது டைட்டில்.. 'லக்ஷ்மி பாம்' டைட்டிலுக்கு ஓவர் எதிர்ப்பு.. அதிரடியாக மாற்றிய படக்குழு!
மும்பை: அக்ஷய்குமார் நடித்துள்ள லக்ஷ்மி பாம் படத்தின் டைட்டிலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, படக்குழு டைட்டிலை மாற்றியுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, தமிழில் நடித்த படம், காஞ்சனா. 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.
இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர்.

கொரோனா பரவல்
இந்தப் படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இதை ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ளார். இதில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். கியாரா அத்வானி ஹீரோயின். படத்தின் ஷூட்டிங் கொரோனா பரவல் தீவிரமடைவதற்கு முன் முடிவடைந்தது.

ஹாட்ஸ்டார்
இந்நிலையில், இந்தப் படம், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திருநங்கை கேரக்டரில் நடிகர் அக்ஷய் குமாரின் லுக் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மாற்ற வேண்டும்
இதற்கிடையே, இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கர்னி சேனா என்ற அமைப்பு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில் லட்சுமி தேவியை களங்கப்படுத்துவதுபோல இதன் டைட்டில் இருப்பதாகவும் உடனடியாக டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது.

நீங்கியது பாம்
இதே போல, நடிகர் முகேஷ் கண்ணா உள்பட சிலரும் இந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், படத் தயாரிப்பாளர்கள் டைட்டிலை மாற்றியுள்ளனர். டைட்டிலில் இருந்த 'பாமை' நீக்கிவிட்டு 'லக்ஷ்மி' என்று டைட்டிலை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











