டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இணையும் லாரன்ஸ் சகோதரர்கள்
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் அவர் சிறப்பான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதாநாயகனாக ராகவா லாரன்சின் சகோதரர் எல்வின் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடன இயக்குநராக தன்னுடைய கேரியரை கோலிவுட்டில் துவங்கிய இவர் தொடர்ந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்து வருகிறார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் லஷ்மி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
காஞ்சனா படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படம் நவம்பர் 12ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழில் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 மற்றும் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ருத்ரன் படம் அறிவிப்பு
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையொட்டி கதிரேசன் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ருத்ரன் என்று அந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ்
இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏஆர் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் லாரன்சின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

விரைவில் அறிவிப்பு
இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்தப் படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆக்ஷன் -காமெடி படம்
படத்தில் அதிரடி ஆக்ஷன், காமெடி உள்ளிட்டவற்றை கலந்து ரவிக்குமார் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மூலம் ராகவா லாரன்ஸ், எல்வின் முதன்முறையாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இணையவுள்ளனர். கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை வைத்து கமர்ஷியல் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











