'ஒரு கிலோ அரிசிகூட ஒரு சிலர் பசி நிரப்பும்' 1000 கிலோ அரிசி அனுப்பிய பார்த்திபனுக்கு லாரன்ஸ் நன்றி!
சென்னை: ஆயிரம் கிலோ அரிசி அனுப்பிய நடிகர் பார்த்திபனுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனாவுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ், பிரதமர் நிவாரணம், முதல்வர் நிவாரணம் உள்ளிட்ட சினிமாத்துறையில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் சேர்த்து மூன்று கோடி வழங்கினார்.
அது தவிர்த்து மக்களுக்கு நேரடியாகவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

உதவி கோரிக்கை
கொரோனா நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பசி தீர்க்கும் விதமாக லாரன்ஸ் 'தாய்' என்ற குழு ஒன்றைத் துவங்கி, அதன் மூலமாக திரைத்துறையில் உள்ள அவரது நண்பர்களுக்கும் உதவி கோரிக்கையை விடுத்துள்ளார். அதை ஏற்று ரஜினிகாந்த் 1000 கிலோ அரிசியை அனுப்பி வைத்தார்.

நல்லது செய்ய
அதைத் தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், லாரன்ஸின் தாயாருக்கு வீடியோவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதோடு, 1000 கிலோ அரிசியையும் வழங்கி உள்ளார். மேலும் அந்த வீடியோவில் பார்த்திபன் கூறும்போது, "சினிமாவில் சம்பாதித்த பணத்தை முக்கால் வாசிக்கும் மேல் மக்களுக்கு நல்லது செய்ய செலவழித்து வருகிறார் லாரன்ஸ்.

இணைந்து உதவுவோம்
அவருக்கு நண்பராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஒருவரால் மட்டும் எல்லாருக்கும் செய்ய முடியாது. அதனால் நம் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவோம்' என்றார். இதுகுறித்து நடிகர் லாரன்ஸ், பார்த்திபனுக்கு எனது பெரிய நன்றி. உங்கள் வீடியோ பார்த்து நாங்கள் அதிக சந்தோசமாக இருக்கிறோம்.

நன்கொடை
எனது கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு, கொரோனா நிவாரணத்திற்காக 1000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதற்கும் நன்றி. உங்களின் பங்களிப்பை எங்கள் 'தாய்' குழு பசியால் பாதிக்கப்பட்டுள்ள சரியான மக்களுக்கு விநியோகிக்கும். உங்களுக்கு பெரிய இதயம் இருக்கிறது, மேலும் பல இடங்களிலும் நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஒரு கிலோ அரிசி
உங்கள் நண்பராக இருப்பதில் நானும் பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் யாராவது உதவி செய்ய விரும்பினால் 8778338209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஒருகிலோ அரிசி கூட சிலரின் பசியை நிரப்பும்' என்றும் லாரன்ஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











