Raghava Lawrence : இந்த மனசுதான் சார் கடவுள்..150 குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்!

சென்னை : ருத்ரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.

Recommended Video

Rudran Audio Launchல் Raghava Lawrence செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

ருத்ரன் படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் லீட்ரோலில் நடித்துள்ளனர்.

Raghava Lawrences adopted 150 children at Rudhran audio launch

ருத்ரன் : நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

காஞ்சனா படத்தின் காப்பியா : சமீபத்தில் வெளியான டிரைலரை பார்க்கும் போது பல காட்சிகள் காஞ்சனா படத்தை பார்ப்பது போல உள்ளது என்றும், கதையில் புதுசா எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் ருத்ரன் படத்திற்கு தணிக்கைக்குழு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் படத்தில் பல இடங்களில் கெட்டவார்த்தை உள்ளதால், தணிக்கைக்குழு அவற்றுக்கு மியூட் போட்டு கத்திரித்துள்ளது.மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் கொண்டதாக உள்ளது.

Raghava Lawrences adopted 150 children at Rudhran audio launch

150 தத்தெடுத்த லாரன்ஸ் : அந்த விழாவில்,150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச் செலவை அவரே ஏற்றுள்ளார். இந்த தகவலை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த குழந்தைகளுக்கு அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், ருத்ரன் படம் வெற்றி பெற வாழ்த்தி வருகின்றனர்.

திடீர் தடை : தற்போது ருத்ரன் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் திடீரென தடைவிதித்துள்ளது. ரெவன்சா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ருத்ரன் படத்திற்கு ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X