வர்றாண்டா முனி.... மீண்டும் ராஜ்கிரணுடன் ராகவா லாரன்ஸ்!
சென்னை: 9 வருடங்களுக்குப்பின் ராகவா லாரன்ஸ்-ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய பேய்ப் பட ட்ரெண்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது ராகவா லாரன்ஸ் இயக்கிய 'முனி' படம். அந்தப் படத்தில் லாரன்சுடன் இணைந்து ராஜ்கிரண் முக்கியத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

முனீஸ்வரன் சிலைக்கு முன் பேயாக வந்து அவர் பண்ண ரகளை இன்றும் மறக்க முடியாதது. அந்த முனிதான் பிறகு காஞ்சனா, காஞ்சனா 2 என கலக்கியது.
அதிலும் 'காஞ்சனா 2' திரைப்படம் 100 கோடிகள் வரை வசூலித்து சாதனை புரிந்தது. தொடர் வெற்றிகளால் லாரன்ஸை நாயகனாக தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'முனி' படத்தின் தொடர்ச்சியாக 'நாகா' என்ற படத்தை உருவாக்கி வருகிறார் லாரன்ஸ். இது முனியின் 4வது பாகம். இதில்தான் ராஜ்கிரணை லாரன்ஸ் மீண்டும் நடிக்க வைக்கப் போகிறாராம்.
9 வருடங்களுக்குப்பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று கூறுகின்றனர்.
வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் முடிந்ததும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











