Bullet Glimpse: ராகவா லாரன்ஸ் தம்பி படம்.. தெறிக்குது ‘புல்லட்’ டீசர்.. அண்ணன் இல்லாமல் எப்படி?
சென்னை: அருள்நிதியை வைத்து டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள புல்லட் படத்தின் அட்டகாசமான க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியானது. ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
குசேலன், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தது போல தம்பிக்காக இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த க்ளிம்ப்ஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
ராகவா லாரன்ஸ் தம்பி: நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும் இயக்குநராகவும் மாறி மாஸ் காட்டி வருகிறார். காஞ்சனா சீரிஸ் படங்களை இயக்கி நடித்து 100 கோடி நாயகனாக மாறிய ராகவா லாரன்ஸ் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து லக்ஷ்மி எனும் டைட்டிலில் காஞ்சனா படத்தை இயக்கினார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கு ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வரும் நிலையில், தம்பியுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடித்துள்ள புல்லட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் ட்ரீட்டாக இன்று வெளியானது.

ஹீரோவான எல்வின்: டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள புல்லட் படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் அறிமுகமாகவுள்ளார். தனது அண்ணன் ராகவா லாரன்ஸ் ஆசிர்வாதத்துடன் அவருடன் இணைந்து எல்வின் நடித்துள்ள நிலையில், புல்லட் ஜெட் வேகத்தில் பறக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ராஜா கதை: புல்லட் படத்தில் டோலிவுட் நடிகர் புஷ்பா பிரபலம் சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போலீஸ் வேடத்தில் ராகவா லாரன்ஸ் தெறி மாஸ் என்ட்ரி கொடுத்து ஆக்ஷனில் அதகளம் செய்கிறார். எல்வின் வரும் ஷாட்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், க்ளிம்ஸில் சொல்லப்படும் அந்த ராஜா கதை போர்ஷனும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்கிறது. அடுத்த ஆண்டு சம்மருக்கு இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications