Chandramukhi 2 Collection: சந்திரமுகி 2 இரண்டாம் நாள் வசூல்.. மகிழ்ச்சியில் ராகவா லாரன்ஸ்!
சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, நன்றாக கல்லாக்கட்டியது. இந்த படத்தில் ஜோதிகா, பிரபு,நாசர், வடிவேலு,வினீத் என பலர் நடித்திருந்தனர்.
தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2: முதல் படத்தை இயக்கிய பி.வாசு இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். அதே வேட்டையபுரம் அரண்மனை, அதே சந்திரமுகி, அதே வேட்டையன் ராஜா இந்த பாகத்திலும் முக்கிய பங்காற்றி உள்ளது. முதல் பாகம் சைக்காலஜி த்ரில்லர் பாணியில் முடிவடைத்த நிலையில் இரண்டாம் பாகத்தில், ஆத்மா, பேய், தெய்வசக்தி என்ற வட்டத்துக்குள் கதையை இழுத்து வந்துள்ளார்.
காப்பி அடித்த லாரன்ஸ்: படத்தின் அறிமுகக் காட்சி தொடங்கி இறுதி வரை ஒவ்வொரு அசைவிலும் லாகவா ரான்ஸ் ரஜினியை அப்படியே காப்பி அடித்து நடித்துள்ளார். இதனால், ராகவா லாரன்ஸின் நடிப்பின் காமெடி சம்பந்தமான காட்சிகளை பார்க்க முடியாமல் போனது. படத்தின் திரை முழுக்க கதாபாத்திரங்கள் நிறைந்திருக்கின்றனவே தவிர, அவை எதுவும் தெளிவாக எழுதப்படவே இல்லை.
சிறப்பான நடிப்பு: கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ராகவா லாரன்ஸை விட இவருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. படத்தில் திகில் காட்சிகள் சிறப்பாக காட்சி படுத்தப்பட்டுள்ளதாகவும், லக்ஷ்மி மேனன் சந்திரமுகி 2 பேய் புகுந்த கதாப்பாத்திரமாக நன்றாக நடித்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இரண்டாம் நாள் வசூல்: இருந்த போது சந்திரமுகி 2 திரைப்படத்தை எதிர்பார்த்த காத்திருந்த ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்த்து வருகின்றனர். படம் வெளியான முதல் நாளிலேயே 7.5 கோடி ரூபாயை வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் ரூ 4.50 கோடி வசூலாகி உள்ளது. ஆக மொத்தம் 12.75 கோடி வசூலாகி உள்ளது. திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 80 கோடி ரூபாய் செலவில் உருவான சந்திரமுகி 2 திரைப்படம் கணிசமான வசூலை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











