jigarthanda doublex: கைத்தட்டலுக்காக காத்திருக்கிறோம்.. வெற்றி தியேட்டரை அலறவிட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீம்!
சென்னை: தமிழின் முன்னணி நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே இசையமைத்து இருக்கிறார்.

ஜிகர்தண்டா: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதை கிடைத்தது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: முதல் பாகத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மிகச்சிறந்த எண்டர்டெயினராக வலம் வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், தொடர்ச்சியாக குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூலம், ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
தனுஷ் பாராட்டு: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த தனுஷ், கார்த்திக்சுப்புராஜின் அருமையான படைப்பு, அற்புதமான நடிப்பைத் தருவது எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழக்கமானதாகிவிட்டது. ஒரு நடிகராக லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தைத் திருடிவிடும். படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என தனுஷ் படக்குழுவை பாராட்டி உள்ளார்.
வெற்றி தியேட்டரில்: இந்நிலையில், வெற்றி திரையரங்கில் எஸ்ஜே சூர்யா, ராகவாலாரன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயன் ஆகியோர் இணைந்து படம் பார்க்க வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், எங்களின் ஓராண்டு உழைப்பு எப்படி வந்து இருக்கிறது என்பதை பார்க்கவும், ரசிகர்களின் கை தட்டலை கேட்க ஆவர்வமாக இருக்கிறோம். இந்த படம் ஒரு நல்ல படம், இந்த படத்திற்கு உங்களின் ஆதரவுவை என்றார்.
வித்தியாசமான தோற்றத்தில்: ஜிகர்தண்டா டபுள்X படத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பலரும் பாசிடிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ராகவா லாரன்ஸ், பல தமிழ் பேய் படங்களில் நடித்துள்ளார். அதைத்தாண்டி அவரை வேறு ஒரு கதாப்பாத்திரமாக வெகு சில படங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. அந்த வகையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











