Jigarthanda Double X Public Review: எஸ்.ஜே.சூர்யா பட்டையை கிளப்பிட்டாரு.. பொதுமக்கள் கருத்து!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இன்று வெளியாகி உள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்,

ஜிகர்தண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் லீட்ரோல் நடித்து அசத்தி உள்ளனர்.

Raghava Lawrence and SJ Suryahs Jigarthanda Double X Public Review

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை: தென்மாவட்டத்தை கண்ட்ரோலில் வைத்திருக்கும் பிரபல ரவுடி அல்லியன் சீசர் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். போலீசாக ஆசைப்பட்டு சந்தர்ப்பத்தால், கொலையாளியாக மாறி சிறையில் இருக்கு எஸ்.ஜே.சூர்யாவுக்கு அல்லியன் சீசரை கொலை செய்தால் சிறையில் இருந்து விடுதலை, போலீஸ் வேலை கிடைக்கும் என பேரம் நடத்தப்படுகிறது.

படத்தின் கதை: இந்த ஆஃபரை ஏற்றுக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா, சீசரைக் கொல்ல சரியான திட்டத்தை போடுகிறார். சினிமா மேல் அவருக்கு இருக்கும் ஆசையை வைத்தே அவரை தீர்த்து கட்ட திட்டம் போடுகிறார். எஸ்.ஜே.சூர்யா கையில் எடுத்த காரியம் நிறைவடைந்ததா, லாரன்ஸ் சுதாரித்தாரா, இவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.

ரசிகர்கள் கருத்து: இன்று இத்திரைப்படம் வெளியாகி உள்ள படம் பார்த்த ரசிகர் ஒருவர் படம் நன்றாக இருக்கு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு வேறலெவல், தெறிக்க விட்டு இருக்கிறார். குடும்பத்தோடு படத்தை பார்க்கலாம், நகைச்சுவை காட்சி எல்லாம் சும்மா தரமா வந்து இருக்கு என்றார்.

பட்டையை கிளப்பிய லாரன்ஸ்: படம் பார்த்த மற்றொரு ரசிகர், நடிப்பு அசுரன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஈக்குவலா லாரன்ஸ் பட்டையை கிளப்பிவிட்டார். பாட்டு மியூசிக் எல்லாம் நல்லா இருக்கு, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியது. முதல் பாதியில் லாகிங் இருந்தது. ஆனால், இரண்டாம் பாதி சூப்பர் என்றார்.

மூன்றாவது ஹீரோ: படத்தின் மூன்றாவது ஹீரோனா அது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இது நம்ம ஏரியா என படத்தில் இசையை தரமாக தந்துள்ளார். “தீ”யின் குரலில் மாமதுரை பாடல் தரமாக இருக்கு. பிஜிஎம்மில் விண்ட்டேஜ் உணர்வைத் தந்து கௌ பாய் ஜானரில் ரகளை செய்து படத்துடன் மேலும் ஒரு படி மேல ஹைப்பை கொடுத்துள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X