ராகவா லாரன்ஸ் படத்தின் தலைப்பு இதுதான்… கதை யார் எழுதுறானு தெரியுமா?
சென்னை: வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
Recommended Video
பிரபல தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், வெற்றிமாறன் கதையில் இத்திரைப்படம் உருவாக உள்ளது.
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படத்தை இயக்கிய துரைசெந்தில் இப்படத்தை இயக்க உள்ளார்.

ஹீரோவாக
அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல், சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக சூரி சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியிருந்தார் சூரி.

விஜய்சேதுபதி
சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டு சூரி மற்றும் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

விரைவில் படப்பிடிப்பு
விடுதலை படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்க திட்டமிட்டுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மற்றுமொரு பிரபல நடிகருக்கும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ராகவா லாரன்ஸ்
இந்நிலையில், வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படத்தை இயக்கிய துரைசெந்தில் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு அதிகாரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

டிரெண்டிங்
இப்படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் உடல் முழுக்க ரத்தத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து வருகிறார். இரண்டாவது போஸ்டரில் பெயர் முருகேசன் என்றும் இணை பெயர் தமிழ்வேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











