»   »  'லோக்கல் மாஸ்...' பாட்டும்... ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ள ஒரு லட்சம் பரிசும்!

'லோக்கல் மாஸ்...' பாட்டும்... ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ள ஒரு லட்சம் பரிசும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் கலக்கி வரும் ராகவா லாரன்ஸ் அடுத்து பாடகராகவும் மாறிவிட்டார்.

ஆமாம்... தான் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் முதல் முறையாக அவர் சொந்தக் குரலில் பாடல் பாடுகிறார்.


Raghava Lawrence announces Rs 1 lakh price for Motta Siva Ketta Siva

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிடும் இந்தப் படத்தை சாய் ரமணி இயக்குகிறார்.


இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


Raghava Lawrence announces Rs 1 lakh price for Motta Siva Ketta Siva

இந்த படத்தில் அம்ரிஷ் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ் முதன் முறையாக 'லோக்கல் மாஸ்...' என்று தொடங்கும் ஒரு பாடலை சுசித்ராவுடன் இனணந்து பாடி இருக்கிறார். இதே பாடலை பாஸ்ட் பீட்டில் பாடகர் திப்புவும், பாடகி மாலதியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.


Raghava Lawrence announces Rs 1 lakh price for Motta Siva Ketta Siva

ஸ்லோ பீட்டிலும், பாஸ்ட் பீட்டிலும் இரண்டு விதமாக பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வரும் ஞாயிறு அன்று சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்பட உள்ளன.


ஒரு லட்சம் பரிசு


இந்த இரண்டு விதமான பாடல்களில் எதை மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ அந்த பாடல் படமாக்கப்படும். படத்தின் மோஷன் போஸ்டரும் அன்றே வெளியிடப்படுகிறது.


Raghava Lawrence announces Rs 1 lakh price for Motta Siva Ketta Siva

அந்த மோஷன் பிக்சர்ஸ் பார்த்து அதில் ராகவா லாரன்ஸ் பேசிய வசனத்தை அதே மாடுலேசனில் பேசியோ, அல்லது பேசி நடித்தோ mottasivakettasivafilm@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அனுப்புவோரில் ஒருவரைத் தேர்வு செய்து ராகவா லாரன்ஸ் ரூ ஒரு லட்சம் பரிசளிக்கிறாராம்.


பத்து வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதி என்பது முக்கியமான கண்டிஷன்!

English summary
Raghava Lawrence has announced Rs one Lakh for his Motta Siva Ketta Siva single track release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil