Raghava Lawrence - யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?.. அவர்லாம் அப்படி இல்லை.. ராகவா லாரன்ஸ் சொன்ன குட்டி கதை
சென்னை: Raghava Lawrence (ராகவா லாரன்ஸ்) அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜய்யா என நடிகர் லாரன்ஸிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது.
4 வருடங்களுக்கு பிறகு: லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அவருக்கு பலத்த அடியை கொடுத்தது. கடைசியாக அவர் நடிப்பில் ருத்ரன் படம் வெளியானது. அவருடன் ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த கதிரேசன் இயக்கியிருந்த அந்தப் படமானது சுமாரான வரவேற்பைப் பெற்றது.
சந்திரமுகி 2: இதனையடுத்து லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் வெளியாகவிருக்கிறது. ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். செப்டம்பர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகிரது.இதன் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக சமீபத்தில் சென்னையில் நடந்தது.

அடுத்த ஊப்பர் ஸ்டார் யார்: இந்தச் சூழலில் சமீபத்தில் பேட்டி அளித்த அவரிடம் அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லாரன்ஸ், "விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் பேசிவருகிறார்கள். ஆனால் அவர் அப்படி எப்போதுமே சொல்லிக்கொண்டதில்லை. சூப்பர் ஸ்டார் படத்துக்கு அவர் ஆசைப்படவும் மாட்டார். நமக்கு நாம்தான் போட்டி என்றுதான் விஜய் பல இடங்களில் கூறிவருகிறார்" என்றார்.
குட்டி கதை: இதனையடுத்து இதுதொடர்பாக குட்டி கதை ஒன்றையும் சொன்ன லாரன்ஸ், "மாங்காய் மரத்தில் மாங்காய்தான் காய்க்கும். அதேபோல் தென்னை மரத்தில் தேங்காய்தான் காய்க்கும். ஆனால் யாரோ ஒருவர் வியாபாரத்திற்காக தேங்காய் மரத்தில் மாங்காய் காய்க்கிறது என சொன்னால் நாம் நம்பக்கூடாது. தேங்காய் மரத்தில் தேங்காய்தான் காய்க்கும் என தேங்காய் மரத்துக்கும்; மாங்காய் மரத்தில் மாங்காய்தான் காய்க்கும் என மாங்காய் மரத்துக்கும் தெரியும். ஆனால் இரண்டுமே ஒரே மண்ணில்தான் முளைக்கிறது. பிரித்து பார்க்கக்கூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











