Raghava Lawrence: “பட ரிலீஸ் டைம்ல ராகவா லாரன்ஸ் இப்படி ஆகிடுவாரு..” ப்ளூ சட்டை மாறன் விளாசல்

சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது.

ராகவா லாரன்ஸுடன் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதனிடையே ராகவா லாரன்ஸ் சிலருக்கு உதவி செய்ததாக டிவீட் செய்திருந்தார்.

இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், "பட ரிலீஸ் டைம்ல ராகவா லாரன்ஸ் இப்படி பரபரப்பாகிடுவாரு" என விமர்சனம் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

Raghava Lawrence: Blue Sattai Maran Criticized Raghava Lawrence for helping poor people

பரபரப்பான ராகவா லாரன்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி, ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸுடன் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சந்திரமுகி முதல் பாகம் போலவே, இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வடிவேலுவின் காமெடி செம்மையாக ஓர்க்அவுட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Raghava Lawrence: Blue Sattai Maran Criticized Raghava Lawrence for helping poor people

சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் தொடங்கவுள்ளன. இதனிடையே ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டரில், ஏழ்மையான நிலையில் உதவி தேவைப்பட்டவர்களுக்கு நேரில் சென்று நிதியுதவி செய்ததாக போஸ்ட் போட்டுள்ளார். ஏற்கனவே மக்களுக்காக தான் உதவி செய்வேன் எனக் கூறியிருந்ததாகவும், அதனை இப்போது தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவர் உதவி செய்ததை வீடியோவாகவும் வெளியிட்டு இருந்தார். ராகவா லாரன்ஸின் இந்த செயலை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். அவர் தொடர்ந்து இதுபோல உதவி வருவதையும் அவர்கள் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் ராகவா லாரன்ஸை ப்ளூ சட்டை மாறன் சைலண்டாக கலாய்த்துள்ளார். "பட ரிலீஸ் டைம்ல லாரன்ஸ் இப்படி பரபரப்பாகிடுவாரு.." என விமர்சித்துள்ளார்.

அதாவது, சந்திரமுகி 2 வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பப்ளிசிட்டிக்காக உதவுகிறார் என ப்ளூ சட்டை மாறன் சொல்ல வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ராகவா லாரன்ஸின் வழி, தலைவர் ரஜினியின் வழி என புகழ்ந்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், "இப்படியெல்லாம் நம்பிதான்" என ரசிகர்களின் அறியாமையை கிண்டல் செய்துள்ளார். மேலும் பலர் சந்திரமுகி 2 வெற்றிக்காக ராகவா லாரன்ஸ் செய்யும் சீப் பப்ளிசிட்டி என விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X