ராகவா லாரன்ஸ் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் புல்லட் பட டீசர் வெளியானது!

சென்னை: அருள்நிதியை வைத்து டைரி எனும் ஹாரர் படத்தை இயக்கிய இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள புல்லட் படத்தின் டீசர் தற்போது வெளியானது. ஜி.வி. பிரகாஷ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த டீசரை வெளியிட்டுள்ளனர்.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஈ படத்தை போல கொல்லப்படும் ஹீரோ புல்லட் வண்டியில் ஆவியாக அமர்ந்துக் கொண்டு எதிரிகளை பழிவாங்க, போலீஸ் அதிகாரியாக வரும் ராகவா லாரன்ஸ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்பது டீசரை பார்த்தால் தெரிகிறது.

இந்த ஆண்டு ஏகப்பட்ட பிரபலங்களின் குடும்பத்தினர் சினிமாவில் அறிமுகமாகி வரும் நிலையில், விரைவில் ராகவா லாரன்ஸ் தம்பியும் ஹீரோவாக கோலிவுட் களத்தில் குதிக்க காத்திருக்கிறார். அவர் நடித்துள்ள புல்லட் பட டீசர் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

புல்லட் டீசர் எப்படி இருக்கு?: "ஒவ்வொரு பேரழிவு நிகழ்வும் எங்கோ ஒரு இடத்தில் நடந்திருக்கும்..." புல்லட் டீசரில் இடம்பெற்றுள்ள இந்த வசனம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிறுவயதிலிருந்தே தான் விரும்பியது எதுவும் கிடைக்கவில்லை என்று லாரன்ஸ் தம்பி எல்வின் டீசரில் கூறுவது, படத்தின் கதைக்களம் ஒரு வித்தியாசமான பாதையில் பயணிக்கவுள்ளதை உணர்த்துகிறது. "உங்களை நான் இழக்க விரும்பவில்லை. உங்களை விட்டு என்னால் போக முடியாது. எல்லாரும் ஒண்ணா போகலாம்" என்ற வசனம், படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களை எடுத்துக்காட்டுகிறது.

தாறுமாறு வசனங்கள்: "சில நேரங்களில் உண்மையை அறிய அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்தி தேவை" என்பது போன்ற வசனங்கள், படத்தின் மர்மமான அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. "காலம்தான் இந்த உலகத்திலேயே பெரிய சக்தி. காலத்தை யாராலும் வெல்ல முடியாது" என்ற வசனம், படத்தின் தத்துவார்த்தமான கருத்தை பிரதிபலிக்கிறது.

வாழ்க்கையில் சில புதிர்களுக்கு விடை கிடைப்பதில்லை. அதை மீறி வந்தாலும் அது நம்மைத் துரத்தும் என்பதே டீசரின் இறுதியில் சொல்லப்படுகிறது. புல்லட் திரைப்படம் மர்மம் நிறைந்த திரைக்கதையுடன் உருவாகியிருப்பது டீசர் மூலம் தெரிகிறது. ரசிகர்கள் இப்படத்தை காண ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X