Raghava Lawrence: அந்த மனசுதானே கடவுள்.. 49வது பிறந்த நாளில் லாரன்ஸ் மாஸ்டர் செய்ததைப் பாருங்க!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பினைக் கடந்து, தனது வருமானத்தின் மூலமும் தான் உதவி செய்வதைப் பார்த்த அவருக்கு உறுதுணையாக பல பிரபலங்கள் முன்வந்ததாலும் அவர் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார். குறிப்பாக, பெற்றோர்களை இழந்த குழந்தைகளை நன்கு படிக்க வைத்து ஆளாக்குவது என, நம் கண் முன்னே பல நூற்றுக்கணக்கான குழந்தைகளை ஆளாக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் இவர் இன்று அதாவது, அக்டோபர் 29ஆம் தேதி, 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவர் பல விதவைத் தாய்மார்களுக்கு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிகவும் சாதாரண ஒரு ஊழியராக இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இந்நிலையில், இவரை நடன இயக்குநராக மாற்றியதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மிகவும் முக்கியமான பங்கு உண்டு. இதனை இவரே பல முறை பேட்டிகளிலும் மேடைகளிலும் கூறியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், தனது பிறந்த நாள் வந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வந்தால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துவது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

raghava lawrence raghava lawrence birthday raghava lawrence mataram foundation

இதுமட்டும் இல்லாமல், ராகவா லாரன்ஸைப் பொறுத்தவரையில் தன்னால் முடிந்த உதவிகளை, ஏழை, எளிய மக்களுக்குச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தனது தாயின் மீதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதும் மிகுந்த பாசம் வைத்துள்ள, ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் கட்டி வழிபட்டும் வருகின்றார். சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வந்தால், அன்றைய தினத்தில் பலருக்கும் உதவுவது, அன்னதானம் செய்வது என, பல்வேறு நல்லகாரியங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

பிறந்த நாள்: இந்நிலையில் இன்று அவருக்கு 49வது பிறந்த நாள் என்பதால், நேற்றே தனது வீட்டிற்கு விதவைத் தாய்மார்களை அழைத்து வந்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்காக தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தையல் மிஷின்களைக் கொடுத்துள்ளார். மேலும் இதனைப் பெற்றுக் கொண்ட விதவைத் தாய்மார்களிடம் ஆசீர்வாதமும் வாங்கியுள்ளார். தாய்மார்களும் ராகவ லாரன்ஸை மனதார வாழ்த்தியுள்ளனர்.

மாற்றம்: தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல எளிய மக்களுக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகள் செய்து வந்துள்ளார், சில மாதங்களுக்கு முன்பு “மாற்றம்” எனும் பெயரில் புதிய அறக்கட்டளை துவங்கி, பல ஊர்களுக்கு தானே நேரில் சென்று, பல டிராக்டர்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

விதவைத் தாய்மார்கள்: அந்த ஊர்களில் உள்ள விதவை தாய்மார்கள் தங்களுக்கு தையல் மிஷின் வழங்கினால் நாங்கள் அதை வைத்து எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம் என்று கேட்டிருந்ததைத் தொடர்ந்து, தானும் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதனை செயல்படுத்தும் விதமாக நாளை அக்டோபர் 29ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு, அந்த விதவைத் தாய்மார்களுக்கு தான் சொந்த செலவில் தையல் மெஷின்களை, இன்று தனது வீட்டிற்கு நேரில் வர வைத்து வழங்கி, அவர்களை நெகிழவைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X