மீடியாவுக்கு முன் உன் ‘திறமையை’ நிரூபி.. பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் சவால்
தன் மீது பாலியல் புகார் கூறிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் மறுத்துள்ளார்.
Recommended Video

சென்னை : தன் மீது பாலியல் புகார் கூறிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகவா லாரன்ஸ், மீடியாவிற்கு முன் தன் நடிப்புத் திறமையை அவர் நிரூபித்தால், நிச்சயம் அடுத்த படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார்.
தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். தமிழில் பிரபல இயக்குநர்களான ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி., நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் மீது அவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பிரபல நடன இயக்குநரும், இயக்குநருமான நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கவலையில்லை
ஸ்ரீ ரெட்டி விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்க நினைக்கிறேன். இது ஒன்றும் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை. இதை பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஆனால் மீடியா நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு இது பற்றி விளக்கம் கேட்ட வண்ணம் இருப்பதால் தான் தற்போது விளக்கம் அளிக்க நினைக்கிறேன்.

ஏழு வருடங்களுக்கு முன்பு
தெலுங்கு ரெபல் படத்தின் ஷூட்டிங்கின் போது தான் என்னை சந்தித்ததாக ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். அது நடந்தது ஏழு வருடங்களுக்கு முன்பு. அப்போதே இது பற்றி பேசாமல் இருந்துவிட்டு, இப்போது ஏன் அவர் இதை சொல்கிறார். சரி அதையும் விட்டுவிடலாம்.

முட்டாளா நான்
எனது ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் என்றும் ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். மேலும் எனது ஓட்டல் அறையில், சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு நான் என்ன முட்டாளா?

தவறில்லை
நான் ஸ்ரீ ரெட்டிக்கு நேரடியாகவே சொல்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். கடவுளுக்கு தெரியும். இத்தனைக்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை.

பரிதாபப்படுகிறேன்
ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை நான் பார்த்தேன். அவரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். உண்மையில் அவருடைய பிரச்சினை தான் என்ன? நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி எல்லோரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்பது தானே.

சவால்
தான் ஒரு நல்ல நடிகை என ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். நாம் ஒன்று செய்வோம். நாம் இருவரும் சேர்ந்து ஊடகத்தினரை சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு சீனும், சில டான்ஸ் ஸ்டெப்புகளும் தருகிறேன். நான் ஆடும் அளவுக்கு கடினமான ஸ்டெப்புகளை தரமாட்டேன். அந்த சீனுக்கு தகுந்த மாதிரி ஸ்ரீ ரெட்டி நடித்தும், ஆடியும் காட்டட்டும். உண்மையிலேயே அது நன்றாக இருந்தால், அந்த இடத்திலேயே வைத்து எனது அடுத்த படத்துக்கான அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன்.

எனக்கு பயமில்லை
நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே அவரை சந்திப்பதில் எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. எனது படத்தில் நடிப்பதன் மூலம் அவருக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கலாம்.

நான் தயார்
எல்லோர் முன்பும் நடித்துக்காட்ட தயக்கம் இருந்தால், எனது மேலாளரை தொடர்பு கொண்டு, அவருடையே வழக்கறிஞர் மற்றும் நலம் விரும்பிகள் முன்னிலையில் தனது நடிப்பு திறனை அவர் வெளிப்படுத்தி காட்டட்டும். அதற்கும் நான் தயார் தான். அவருக்கு நான் உதவி செய்கிறேன்.

அம்மாவுக்கு கோயில்
நான் பயந்து போய் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை. பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் தான் என் தாயிக்கு கோயில் கட்டி, அதை அனைத்து தாய்மார்களுக்கும் அற்பணித்திருக்கிறேன். நல்லதையே பேசுவோம். நல்லதையே செய்வோம். அவரது வாழ்க்கை சிறக்க நான் பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











