chandramukhi 2:‘’யாருடா பீதிக்கு பொறந்த பய’’..டப்பிங் ஸ்டுடியோவை அலறவிட்ட வடிவேலு!
சென்னை: சந்திரமுகி இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில்,டப்பிங் ஸ்டுடியோவை அலறவிட்ட வடிவேலுவின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி.வாசுவின் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, நாசர், வினீத்,பிரபு, வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஆக்ஷன், திரில்லர் காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் தமிழ்நாட்டில் 200 நாட்கள் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

ரஜினி நடித்த சந்திரமுகி: சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்திரமுகி இரண்டாம் பாகம் தயாரிப்புக்கான ஆலோசனைகள் பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு சந்திரமுகி2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸுடன் கதாநாயகியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ராதிகா, சிருஷ்டி, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சந்திரமுகி 2: பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான, ஸ்வகத்தாஞ்சலி பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இப்படத்தில் ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.
வடிவேலு: சந்திரமுகி முதல் பாகத்தில் முருகேசா என்ற கதாபாத்திரத்தில் மாப்பு மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு என விதவிதமான முகபாவத்தைக் காட்டி ரசிகர்களை சிரிப்பு மழையில் நனையவிட்ட வடிவேலு,இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவர் செய்யும் அலப்பறையை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
அலறவிட்ட வடிவேலு: இந்நிலையில், லைகா நிறுவனம் சந்திரமுகி 2 படத்திற்கு வடிவேலு டப்பிங் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளது. அதில் 'யார பார்த்துடா பீதிக்கு பொறந்த பயனு சொன்ன, சந்திரமுகி பார்ட் 10 எடுத்தாலும், சந்திரமுகியோட பெஸ்ட் பிரண்ட் நான் தான் டா என்று சொல்ல பின்னிருந்து சந்திரமுகி எவரதி என்று கர்ஜிக்க வடிவேலு அலறுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடிக்கு பஞ்சமே இருக்காதுபோல என கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











