Raghava Lawrence: KPY பாலா கேட்காமலே 10 லட்சம் கொடுத்த ராகவா லாரன்ஸ்.. அந்த மனசு தான் சார் கடவுள்!

சென்னை: 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி விஜய் டிவியின் தொகுப்பாளராக கலக்கி வரும் KPY பாலாவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ராகவா லாரன்ஸ் ருத்ரன், ஜிகர்தண்டா 2, சந்திரமுகி 2 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

Raghava Lawrence donates 10 Lakhs to KPY Bala for a super reason

இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள ருத்ரன் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி பாலா தொகுத்து வழங்கினார்.

ருத்ரன் ஆடியோ வெளியீட்டு விழா:

Raghava Lawrence donates 10 Lakhs to KPY Bala for a super reason

கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ரன் படம் ஆரம்பத்தில் பேய்ப் படம் என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், அதிரடி ஆக்‌ஷன் படம் என்பதை சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரெய்லர் உணர்த்தியது. ருத்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பாடல்கள் ஹிட்

Raghava Lawrence donates 10 Lakhs to KPY Bala for a super reason

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் பாடலை இந்த படத்திற்காக ரீமிக்ஸ் செய்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மேலும், பிக் பாஸ் பிரபலம் அசல் கோலார் பாடிய ஜோர்த்தாலைய உருட்டாதே பாடலுக்கும் லாரன்ஸ் வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ளார்.

பாலாவுக்கு 10 லட்சம்:

Raghava Lawrence donates 10 Lakhs to KPY Bala for a super reason

விஜய் டிவி பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அதை அறிந்த ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு மேடையில் தனது தாயார் கையில் பாலாவிற்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், KPY பாலாவும் அதே போல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருவதை அறிந்து அவருக்கு இப்படியொரு உதவியை கேட்காமலே செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X