கேரள மக்களுக்கு நேரில் உதவப் போகிறேன்.. ரூ. 1 கோடி நிதி கொடுக்கிறேன்.. லாரன்ஸ் அதிரடி!

நடிகர் ராகவா லாரன்ஸ் கேரளாவுக்கு ஒரு கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கைக்கு ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி பிறகு நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இவர் இப்போது காஞ்சனா 3 திரைப்பட வேலைகளில் பிசியாக உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Raghava Lawrence donating 1 crore for Kerala!

வரலாறு காணாத மழை, வெள்ளத்தினால் கேரளா மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இழப்பை சரிசெய்ய 2500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பலரும் நிதியுதவியளித்துள்ளனர். அந்த வகையில் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவியளிக்க திட்டமிட்டேன். ஆனால் மழை அதிகமாக இருந்ததனால் எல்லா பகுதிகளுக்கும் செல்வது கடினம் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இப்போது மழை குறைந்துவிட்டது.

அதனால் அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேவையாற்றப் திட்டமிட்டுள்ளேன். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயனை வரும் சனிக்கிழமை சந்திக்க உள்ளேன்.

அப்போது என்னுடைய பங்களிப்பை அவரிடம் அளித்துவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உதவ தன்னை அனுமதிக்க வேண்டுமென கோருவேன். கேரளாவுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. சீக்கிரமாக கேரளா மீண்டுவர ஸ்ரீ ராகவேந்திரா சுவாமியை பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X