ராகவா இருக்கு லாரன்ஸ் எங்க போச்சு?.. சந்திரமுகி 2 பிரஸ்மீட்டில் ராகவா லாரன்ஸ் கொடுத்த அடடே விளக்கம்!
சென்னை: லாரன்ஸாக சினிமாவில் நுழைந்து ராகவேந்திரர் மீதான பற்று காரணமாக ராகவா லாரன்ஸாக மாறியவர் தற்போது சந்திரமுகி படத்தின் புரமோஷன்களில் வெறும் ராகவாவாக மாறியிருப்பது ஏன் என்கிற கேள்விக்கு ராகவா லாரன்ஸ் அளித்த விளக்க வீடியோவை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
இதுவரை ராகவா லாரன்ஸ் என்றே தனது பெயரை பயன்படுத்தி வந்த லாரன்ஸ் மாஸ்டர் புதிதாக ராகவா என தனது பெயரை மாற்றுவதற்கான காரணம் என்ன என ஏகப்பட்ட பேர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் அந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தில் இருப்பதன் காரணமாகத்தான் ராகவா லாரன்ஸ் பெயரில் இருந்து லாரன்ஸ் நீக்கப்பட்டு வெறும் ராகவா என வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன.
ராகாவா லாரன்ஸை விளாசிய ப்ளூ சட்டை மாறன்: சமீபத்தில் நடந்த சந்திரமுகி 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ராகவா லாரன்ஸிடம் இந்தக் கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகவா லாரன்ஸ், ரொம்ப நாளாகவே பெயரை சின்னதாக வைக்க வேண்டும் என எண்ணியதாகவும் அதன் காரணமாகவே சந்திரமுகி 2 படத்தில் ராகவா என தனது பெயரை சுருக்கியதாக விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்சின் விளக்கத்தை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன் லாரன்ஸ் எனும் பெயரை நீக்கியது ஏன்? - ராகவா ஜி விளக்கம்.
'நான் எதுக்காக சொல்றன்னா.. அதுக்காக சொல்றேன்' மொமன்ட். பங்கமாக கலாய்த்துள்ளார்.

ஜெமினிக்கு அப்படி நடந்தது?: இதற்கே இப்படி என்றால், முரளிதாஸ், ஜெமினி கணேசன் நடித்த ஜீஸஸ் வாழ்க்கை வரலாறு படத்தில் வெறும் ஜெமினி என்ற பெயர் தான் இருந்தது கணேசன் பெயர் இல்லை என நெட்டிசன்கள் இதற்கு முன்னதாகவும் இப்படி நடிகர்களின் பெயர்களை மத ரீதியாக மாற்றம் செய்த நிகழ்வுகள் நடைபெற்றதாக கமெண்ட் போட்டுள்ளார்.
ஆஸ்கர் அவார்டு: முடியாது இந்த படத்துக்கு தேசிய விருது வாங்கிட்டு ஆஸ்கர் விருதுக்கும் நாமினேட் செய்வார்கள் எனக்கு இன்னொரு நெட்டிசன் கிண்டலடித்துள்ளார்.
தலையில் தபேலா வாசிப்பீங்க: "இதெல்லாம் ஒரு காரணம்... யாராவது மொட்டை அடிச்சிட்டு வந்தா அவன் தலையில் தபேலா வாசிப்பீங்க" என ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் ராகவா லாரன்ஸின் அடடே விளக்கத்திற்கு குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











