கஜா புயலில் வீட்டை இழந்த பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்
Recommended Video
சென்னை: கஜா புயலில் வீட்டை இழந்த பாட்டிக்கு புது வீடு கட்டிக் கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
நடிகர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர் என்று பல திறமைகள் கொண்ட ராகவா லாரன்ஸ் இரக்க குணத்திற்கு பெயர் போனவர். மாற்றுத் திறனாளிகளுக்கு பேராதரவாக உள்ளார்.

மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நிதியுதவி அளிக்கிறார். இந்நிலையில் ஒரு ஏழை தாயின் கண்ணீரை துடைத்துள்ளார்.
கஜா புயலின்போது வீட்டை இழந்து பாட்டி ஒருவர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதை பார்த்த ராகவா லாரன்ஸ் அந்த பாட்டிக்கு தான் முதலில் வீடு கட்டிக் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில் வீடு கட்டி முடிந்து அந்த பாட்டியிடம் சாவியை ஒப்படைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். அம்மாக்களுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாட்டியுடன் புது வீட்டில் புகைப்படங்கள் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். அதை பார்த்த நெட்டிசன்கள், நீங்க மகராசனா இருக்கணும் என்று மனதார வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











