ஜெயிலர் வெற்றிக்கு நெல்சனுக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்த பிரபல நடிகர்.. என்ன மேட்டரு?
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் நெல்சனை அழைத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சூட் ரூமில் பிரம்மாண்ட பார்ட்டி வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமன்னாவின் காவாலா பாடல் ஜெயிலர் படத்துக்கு ஆரம்பத்தில் ஹைப் கொடுத்தாலும் படம் வெளியான பின்னர் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் தலைவர் மீது விழும்படி பக்காவான படத்தை இயக்குநர் நெல்சன் ரசிகர்களுக்காக விருந்து படைத்துள்ளார்.

கதை, திரைக்கதை என்றெல்லாம் பெரிதாக எதிர்பார்த்து போகக் கூடாது, விமர்சன ரீதியாக வெற்றிப்பெறக் கூடிய படங்களை சின்ன நடிகர்களை வைத்தே எடுக்கலாம், ரஜினி படம் என்றாலே லார்ஜர் தன் லைஃப் படம் என நெல்சனே பேட்டியில் பேசியுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களும் அதையெல்லாம் பற்றி பெரிதாக கவலைப்படாமல் சூப்பர்ஸ்டாரின் ஆக்ஷன் அலப்பறையை தியேட்டரில் காண கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.
150 கோடி வசூல்: முதல் நாளிலேயே ஜெயிலர் திரைப்படம் 90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாகவும் வெள்ளிக்கிழமை வசூலையும் சேர்த்து 150 கோடி என பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கலெக்ஷனை சொல்லி வருகின்றனர். ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் படக்குழுவினர் அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

இமய மலையில் ரஜினி: ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே இமய மலைக்கு கிளம்பி ரஜினிகாந்த் சென்று விட்டார். இந்நிலையில், ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பிற்காக அவரை பாராட்டியுள்ளது யார் என்றால் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பெரிய பார்ட்டியே வைத்து பாராட்டி விட்டாராம்.
பார்ட்டி கொடுத்து பாராட்டிய ராகவா லாரன்ஸ்: சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் சூட் ரூமையே புக் செய்து இயக்குநர் நெல்சனுக்கு ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அசத்தலான பார்ட்டியை ராகவா லாரன்ஸ் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த பார்ட்டியில் சில சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த படம் அவருடனா: ரஜினியை இயக்கிய இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2, பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் உடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்து விட்டாரா? அதற்காகத்தான் இந்த பெரிய பார்ட்டியா? என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.


Click it and Unblock the Notifications