காஞ்சனா 2வுக்கு ரஜினி வேண்டாம் என்று முடிவு செய்த லாரன்ஸ்.. அவரே சொன்ன காரணம் இதோ

சென்னை: Raghava Lawrence (ராகவா லாரன்ஸ்) காஞ்சனா இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த்தை ஏன் நடிக்க வைக்கவில்லை என்பது குறித்து ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் ரெக்கமண்ட்டில் உதவி நடன இயக்குநராக சேர்ந்தார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ்.

Raghava Lawrence has revealed why Rajinikanth was not cast in Kanchana 2

சிரஞ்சீவி கொடுத்த வாய்ப்பு: சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர். அதனையடுத்து பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரது நடன அமைப்பு வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் அமைந்ததால் லாரன்ஸ் ஸ்டைல் ஆஃப் டான்ஸ் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

நடிகராக லாரன்ஸ்: நடன அமைப்பாளராக கேமராவுக்கு பின்னாடி மட்டும் நிற்காமல் பாடல்களிலும் தலை காண்பித்து நடனம் ஆடினார். அதுவரை பிரபுதேவாவே கதி என்று கிடந்த ரசிகர்கள் லாரன்ஸின் நடனத்தை வெகுவாகவே ரசித்தனர். இப்படிப்பட்ட சூழலில் அஜித்குமார் நடித்த உன்னைக்கொடு என்னைத் தருவேன், பிரசாந்த்தின் பார்த்தேன் ரசித்தேன், கே.பாலசந்தரின் 100ஆவது படமான பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்கள் செய்தார். அதேபோல் அற்புதம் படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். அடுத்து தீபாவளியை முன்னிட்டு 10ஆம் தேதி ஜிகர்தண்டா 2 வெளியாகிறது.

மாஸ்: நடன அமைப்பாளர், நடிகராக வலம் வந்துகொண்டிருந்த லாரன்ஸ் 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் ஸ்டைல், டான் ரெபெல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மெகா ஹிட்: தமிழில் அவர் இயக்குநராக அறிமுகமானாலும் மெகா ஹிட் அவருக்கு கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த 2011ஆம் ஆண்டு காஞ்சனா படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் காஞ்சனா தவிர மற்ற படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றது. காஞ்சனா ஏற்படுத்திய டிமாண்டால் அந்தப் படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்தார் அவர்.

நோ ரஜினி: இந்நிலையில் ஜிகர்தண்டா 2 படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லாரன்ஸ், “காஞ்சனா 2வில் ரஜினிகாந்த் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தின் ஹீரோ தன்னுடைய தாயின் இடுப்பில் அமர்வது போன்ற காட்சிகள் இருக்கும். அது ரஜினிக்கு செட் ஆகாது என்பதால் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டேன்” என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X