ரைமிங்னா இதுதான்.. ரங்கஸ்தலம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்?

நடிகர் ராகவா லாரன்ஸ், தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: காஞ்சனா 3 வெற்றிக்கு பிறகு, பாலிவுட்டில் காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

லக்‌ஷ்மி பாம் என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தில், அக்‌ஷய் குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டவுட்டு தான்

டவுட்டு தான்

முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காமெடி பேய் படங்கள் மாபெரும் வெற்றியை தந்தன. ஆனால், கடைசியாக வெளியான காஞ்சனா 3 படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை.

இதனை உணர்ந்த ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4ம் பாகத்தை உருவாக்குவாரா என்பது டவுட்டு தான். ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கத்தில் கிங்

இயக்கத்தில் கிங்

ராகவா லாரன்ஸ் மற்ற இயக்குநர்கள் படங்களில் நடித்தால், அந்த படங்கள் ஓடுவதே இல்லை. ஆனால், அவர் இயக்கும் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடிக்கின்றன. மக்களின் மனங்களை அறிந்து மாஸ் கமர்ஷியல் படம் பண்ணும் டெக்னிக்கை லாரன்ஸ் நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

பாலிவுட் என்ட்ரி

பாலிவுட் என்ட்ரி

தென்னிந்திய இயக்குநர்களின் திறமைகளை உற்றுநோக்கி வரும் பாலிவுட் நடிகர்கள், தென்னிந்திய இயக்குநர்களை பாலிவுட்டில் இயக்க அழைத்து வருகின்றனர். மணிரத்னம், ஏ.ஆர். முருகதாஸ், பா. ரஞ்சித், லாரன்ஸ், அட்லி உள்ளிட்டோர் பாலிவுட்டில் கால் வைத்து வருகின்றனர்.

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் லக்‌ஷ்மி பாம் படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் புகழ் கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகின்றனர். விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைய போகிறதாம்.

ரங்கஸ்தலம் ரீமேக்

ரங்கஸ்தலம் ரீமேக்

ராம்சரண், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ராகவா லாரன்ஸ் வாங்கியுள்ளார் என்ற தகவலும், அந்த படத்தில் அவரே நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி, இந்த படத்தை இயக்கவுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X