மரியாதை இல்லன்னு வெளியேறிய படத்தில் மீண்டும் இணைந்த ராகவா லாரன்ஸ்

By Siva

சென்னை: மரியாதை இல்லை என்று கூறி வெளியேறிய லக்ஷ்மி பாம்ப் படத்தில் மீண்டும் சேர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காஞ்சனா படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வந்தார்.

இந்நிலையில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறி லக்ஷ்மி பாம்ப் படத்தில் இருந்து விலகினார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ்

லக்ஷ்மி பாம்ப் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் அந்த படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார். தன்னை புரிந்து கொண்டு பிரச்சனையை தீர்த்து வைத்த அக்ஷய் குமாருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு மரியாதை அளிக்கும் அக்ஷய் குமார் மற்றும் தயாரிப்பாளர் சபீனா கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். மீண்டும் படத்தில் இணைந்ததில் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

லக்ஷ்மி பாம்ப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநரான ராகவா லாரன்ஸுக்கு தெரியாமலேயே வெளியிட்டுவிட்டனர். மூன்றாம் நபர் கூறித் தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ராகவா லாரன்ஸுக்கு தெரிய வந்தது. இதையடுத்தே அவர் சுயமரியாதை தான் முக்கியம் என்று கூறி படத்தில் இருந்து விலகினார். மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை என்றார் அவர்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

லக்ஷ்மி பாம்ப் படத்தை நீங்க தான் சார் இயக்க வேண்டும் என்று அக்ஷய் குமார் ரசிகர்களும், ராகவா லாரன்ஸின் ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை வந்த லக்ஷ்மி பாம்ப் படத்தின் தயாரிப்பாளர்கள் ராகவா லாரன்ஸை சமாதானம் செய்து படத்தை இயக்க வைத்துள்ளனர். பணம், புகழை விட மரியாதை தான் ரொம்ப முக்கியம் என்கிறார் ராகவா லாரன்ஸ்.

திருநங்கை

திருநங்கை

லக்ஷ்மி பாம்ப் படத்தில் அக்ஷய் குமார் திருநங்கையாக நடிப்பது குறித்து அறிந்து பாலிவுட் ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். கோலிவுட்காரர்கள் பேய் படம் என்றாலே அதை கொண்டாடுவார்கள். இந்நிலையில் காஞ்சனா லக்ஷ்மியாக மாறி பாலிவுட் சென்றுள்ளது. பாலிவுட் ரசிகர்கள் லக்ஷ்மி பேயை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X