Jigarthanda 2 - ஜிகர்தண்டா 2.. படத்தின் மேல் அபார நம்பிக்கை வைத்திருக்கும் லாரன்ஸ்..
சென்னை: Jigarthanda 2 (ஜிகர்தண்டா 2) ஜிகர்தண்டா 2 படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என ராகவா லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை கார்த்திக் பக்கம் திருப்பியது.

ஜிகர்தண்டா: அதனைத் தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். மதுரையை கதைக்களமாக வைத்து தனது ஸ்டைலில் படத்தை கொடுத்திருந்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி கார்த்திக் சுப்புராஜை ட்ரெண்டாக்கியது. இரண்டே படங்களில் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத தனித்துவமான இயக்குநராகிவிட்டார் அவர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: அதனையடுத்து ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய அவர் தற்போது எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் அறிவிப்போடு வெளியான டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இதனை வித்தியாசமான முறையில் கார்த்திக் சுப்புராஜ் ப்ரெசண்ட் செய்வார் என கூற ஆரம்பித்திருக்கின்றனர். படமானது தீபாவளிக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பு: இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய லாரன்ஸ், "ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தை நான் செய்திருக்க வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருந்ததால் என்னால் செய்ய முடியவில்லை. அந்தப் படத்தை ரொம்பவே மிஸ் செய்தேன். அதற்காகத்தான் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கடவுளின் அருளால் கிடைத்திருக்கிறார்.

நிறைய பேச வேண்டும்: இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படப்பிடிப்பு நடந்த இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்தாலேயே இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தது மகிழ்ச்சி. இன்னும் நிறைய மேடைகள் இருக்கின்றன. அவற்றில் இந்தப் படத்தை பற்றி அதிகம் பேச வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











