லகலகலகலகலக.. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது, சந்திரமுகி 2.. பி.வாசு இயக்கத்தில் இவர்தான் ஹீரோ!
சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. இதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், மாளவிகா, நாசர், உட்பட பலர் நடித்திருந்தனர்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.

வடிவேலு காமெடி
2005-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது. வடிவேலுவின் காமெடியும், ரஜினியின் வேட்டையன் கேரக்டரும் பாடல்களும் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்றாக இருந்தன. இதனால் குடும்பத்தினர் கொண்டாடும் படமாக இது இருந்தது. இப்போதும் இந்தப் படத்தில் வடிவேலு காமெடி பேசப்படுவதாக இருக்கிறது.

சாதனை படைத்தது
சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் இந்தப் படம் 890 நாட்கள் ஓடியது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் கூறி இருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இயக்குனர் வாசு, சந்திரமுகி படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையை தான் உருவாக்கி விட்டதாகக் கூறினார்.
அட்வான்ஸ் பணம்
அதற்காக ஹீரோ ஒருவரிடம் பேசி வருவதாகக் கூறி இருந்தார். இந்நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில், தான் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்திலிருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு நிதியுதவி செய்துள்ளார்.

நிவாரண நிதி
அதில், 50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் ரூபாயை ஃபெப்சிக்கும் ரூ. 50 லட்சத்தை டான்ஸ் சங்கத்திற்கும், ரூ. 75 லட்சத்தை தொழிலாளர்களுக்கும் அளித்துள்ளார். ரூ. 25 லட்சத்தை மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு கொடுத்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











