லாரன்ஸ் மீதுதான் இந்த பேய்க்கு எம்புட்டு பாசம் பாருங்களேன்!
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவில் யாருக்கும் கை கொடுக்காத பார்ட் 2 திரைப்பட பாணி, ராகவா லாரன்சுக்கு மட்டும் எப்படி கை கொடுக்கிறது என்பது தெரியவில்லை.
ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது வழக்கமான ஒன்று. தமிழ் சினிமாவிற்கு இந்த ட்ரெண்டை அறிமுகம் செய்து வைத்த பெருமையும் ராகவா லாரன்சையே சேரும்.
ஆனால் அதற்கு பிறகு தமிழில் வெளியான பார்ட் 2 திரைப்படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனால் பார்ட் 3-யும் தாண்டி, வெற்றிகரமாக பார்ட் 4 படத்தையும் ரிலீஸ் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

பார்ட் 4
தமிழில் வெளியான முதல் பார்ட் 4 திரைப்படம் என்ற பெருமையையும், இரண்டாவது பார்ட் 3 என்ற திரைப்படம் என்ற பெருமையையும், ராகவா லாரன்ஸின், காஞ்சனா -3 (முனி 4 ) திரைப்படம் பெற்றுள்ளது. சூர்யாவின் சிங்கம் 3(சி 3) திரைப்படம்தான் தமிழில் வெளியான முதல் பார்ட் 3 திரைப்படம்.

கை கொடுத்த பேய்
முதல் முதலில் தொடங்கி வைத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, இந்த தொடர்ச்சி திரைப்பட பாணி, ராகவா லாரன்ஸிற்கு மட்டும் அமோகமாக கை கொடுக்கிறது. முனி பட வரிசையில் வெளியான மூன்று படங்களும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படமும் வெற்றிப்படமாகவே அமைந்துள்ளது.

வசூல் சாதனை
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான காஞ்சனா 3, முதல் நாளிலேயே ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே மாதிரி கதையம்சம் கொண்ட திரைப்படங்களை ரசிகர்கள் வரவேற்காத நிலையில், காஞ்சனா திரைப்படம் அதற்கு விதிவிலக்கு என்றால் அது மிகையல்ல .

5வது பார்ட்டும் வருதாம்
இது மட்டுமல்ல... ரசிகர்களுக்கு இன்னொரு செய்தி. இந்த படத்தின் அடுத்த பாகம் அதாவது முனி - 5 (காஞ்சனா 4) படமும் வெளியாகுமாம். படம் முடியும்போது, இதற்காண அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











