அடேங்கப்பா.. ராகவா லாரன்ஸ் படம் 125 கோடியா.. ஆச்சரியத்தில் திரையுலகினர்!

மும்பை : ஹிந்தி திரைப்படத் துறையில் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பிரபல தமிழ் படத்தின் ரீமேக்கான லட்சுமி பாம் திரைப்படம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ள இந்த படத்தில் அக்சய்குமார் லீட் ரோலில் நடித்திருக்கும் இந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

பயமுறுத்தும் ஹாரர் காட்சிகள் மற்றும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் என அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைக்கும் கதைக்களத்தை கொண்ட லட்சுமி பாம் திரைப்படம் ஓரிரு மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமான ராகவா லாரன்ஸ், நடிப்பு இயக்கம் என அனைத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் இயக்கிய பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் இன்றளவும் கமர்சியல் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது.

வெற்றி இயக்குனர் முத்திரை

வெற்றி இயக்குனர் முத்திரை

தெலுங்கில் மாஸ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த ராகவா லாரன்ஸ் இயக்கிய முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பதித்து விட்டார். நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த படம் தெலுங்கு திரைப்படத் துறையில் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூல் சாதனை புரிந்தது மேலும் இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.

மிரட்டலான ஹாரர் திரைப்படம்

மிரட்டலான ஹாரர் திரைப்படம்

தெலுங்கில் மாஸ் படத்தை தொடர்ந்து டான், ரிபல் போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ் தமிழில் முதன்முறையாக தமிழில் முனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் மற்றும் வேதிகா நடித்திருந்த இந்த மிரட்டலான ஹாரர் திரைப்படம் கலகலப்பான காமெடி காட்சிகளோடு வெளியாகி சக்கைப்போடு போட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரை அரங்குகளில் வசூல் மழையை பொழிந்துள்ளது

பாகம் 2 காஞ்சனா

பாகம் 2 காஞ்சனா

மிரட்டலான ஹாரர் திரைப்படமாக உருவான முனி தற்பொழுது பல பாகங்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில் முனி படத்தின் பாகம் 2 காஞ்சனா என்ற பெயரில் உருவாகி ராகவா லாரன்ஸ்-க்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

இரண்டு மடங்கு வெற்றி

இரண்டு மடங்கு வெற்றி

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்முறையாக திருநங்கையாக நடித்திருந்த காஞ்சனா, சரத்குமாரின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான படமாக அனைவராலும் பாராட்டப்பட்டது. ராகவா லாரன்ஸ், லட்சுமிராய், கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் ஸ்ரீமான் என பலரும் நடித்திருந்தால் காஞ்சனா திரைப்படம் முனி திரைப்படத்தை விட இரண்டு மடங்கு மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலை வாரி குவித்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தது.

ஹிந்தியில் அக்சய்குமார்

ஹிந்தியில் அக்சய்குமார்

அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி மற்றும் பயமுறுத்தும் ஹாரர் காட்சிகள் என தமிழ் ரசிகர்களை கதிகலங்க வைத்த காஞ்சனா திரைப்படம் தற்போது ஹிந்தியில் அக்சய்குமார் நடிப்பில் லட்சுமி பாம் என்ற பெயரில் உருவாகி உள்ளது.

125 கோடிக்கு

125 கோடிக்கு

லட்சுமி பாம் திரைப்படத்தை இயக்குவதில் பல சிக்கல்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் பின் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்பொழுது ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். இவ்வாறு பாலிவுட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான லட்சுமி பாம் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது டிஸ்னி மற்றும் ஹாட் ஸ்டார் இணைந்து வெளியிட உள்ள இத்திரைப்படம் சுமார் 125 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X