Benz movie: லோகேஷ் கனகராஜின் எல்சியூவில் இணையும் பென்ஸ்.. மிரட்ட தயாரான பிரபல ஹீரோ!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தின் இயக்குநராக கமிட்டாகிஅடுத்தடுத்து பரபரப்பாக இயக்கி வருகிறார். சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்த நிலையில், அடுத்ததாக வட இந்தியாவின் அடுத்தடுத்த பகுதிகளில் சூட்டிங் நடக்கவுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்தும் இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றிருந்தார்.

இதனிடையே தயாரிப்பிலும் அடுத்தடுத்து இணைந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவரது பைட் கிளப் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக பென்ஸ் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையை அவரே எழுதியுள்ள நிலையில் ரெமா பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் படத்தை இயக்கி வருகிறார்.

raghava lawrence

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தில் இயக்குநராக இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது வட இந்தியாவில் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளது. இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டில் விஜய், திரிஷா லீட் கேரக்டர்களில் நடிக்க லியோ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தின் வசூல் அதிரடியாக அமைந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பகுதி விமர்சனங்களை பெற்ற நிலையில், அதை தான் மனதில் ஏற்றிக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் செயல்பட உள்ளதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

பென்ஸ் படம்: இவரது அடுத்தடுத்த படங்கள் எல்சியூவில் இணைந்து வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக உள்ள இந்த பாணியை தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இணைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தில் துவங்கிய இந்த பாணி, அடுத்தடுத்து விக்ரம், லியோ படங்களிலும் தொடர்ந்தது. இதனிடையே அடுத்ததாக லோகேஷ் தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் படத்திலும் தன்னுடைய எல்சியூவை இணைக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவும் செய்கிறார். ரெமோ படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த பாக்கியராஜ் கண்ணன் படத்தை இயக்கி வருகிறார்.

LCUவில் இணையும் பென்ஸ் படம்: முன்னதாக இந்தப் படத்தை லோகேஷின் நண்பரான ரத்னகுமார் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்க கமிட்டாகியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ள நிலையில், லோகேஷின் முந்தைய படங்கள் போலவே இந்தப் படமும் மாஸான இசையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் இணையவுள்ள பென்ஸ் படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

வில்லனாக இணையும் மாதவன்: பென்ஸ் படத்தில் வில்லனாக நடிகர் மாதவன் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா மிரட்டியிருந்தார். இந்நிலையில் பென்ஸ் படத்தில் மாதவன் கேரக்டரும் அதேபோல அமையும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ், இந்தி என அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் மாதவன், இயக்குநராகவும் தன்னை நிரூபித்துள்ள நிலையில், தற்போது தமிழில் அவர் நடிக்கவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X