“அடுத்த படத்துல பேய் வேண்டாமே”.. லாரன்ஸுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்
தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
Recommended Video
மும்பை: காஞ்சனா பட இந்தி ரீமேக்கிற்காக மும்பை சென்றுள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், அங்கு ரஜினியை நேரில் சந்தித்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்த காஞ்சனா 3 படம் சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இப்படம் வசூல் ரீதியாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
தனது முந்தைய படங்களைப் போலவே இதிலும், பேய்க் கதையை காமெடி கலந்து சொல்லி இருப்பதால், படத்தை குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர்.

லக்ஷ்மி பாம்:
இந்நிலையில், காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் பிசியாகி விட்டார் ராகவா லாரன்ஸ். அக்ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு லக்ஷ்மி பாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் அமிதாப் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினியுடன் சந்திப்பு:
இப்பட வேலைகளுக்காக மும்பை சென்றுள்ளார் லாரன்ஸ். அங்கு தர்பார் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினியை அவர் வேதிகாவுடன் சென்று சந்தித்துள்ளார். இதனை புகைப்படங்களுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அறிவுரை:
இந்த சந்திப்பின் போது, ‘காஞ்சனா 3யை விட அடுத்து எடுக்கும் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும்' என லாரன்ஸை ரஜினி வாழ்த்தியதாகத் தெரிகிறது. கூடவே, ஒரே மாதிரியாக பேயை மட்டும் வைத்து படம் எடுப்பதை தவிருங்கள் எனவும் அவர் லாரன்ஸுக்கு அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது.

பேயை விடுவாரா?
ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ், தனது ஒவ்வொரு பட வெற்றிக்குப் பின்னரும், அவரை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம் தான். அது போன்றே இம்முறையும் அவர் ரஜினியைச் சந்தித்துள்ளார். ரஜினி அறிவுரைப்படி அடுத்த படத்தில் தனது கதைக்களத்தை லாரன்ஸ் மாற்றுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











