»   »  ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ராகவா லாரன்ஸ் இரு புதிய படங்களில் நடிக்கிறார். அவை மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா.

காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய இடம் கிடைத்துள்ளது ராகவா லாரன்சுக்கு.

இப்போது அவர் இரு புதிய படங்களை இயக்குகிறார். இந்த இரு படங்களையுமே வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது.

மொட்ட சிவா கெட்ட சிவா

மொட்ட சிவா கெட்ட சிவா

இந்த இரு படங்களில் முதல் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இந்தப் பட டிசைன்களில் வெளுத்த தலையும், முரட்டுத் தோற்றமும் கொண்ட கெட்டப்பில் தோன்றுகிறார் லாரன்ஸ்.

நாகா

நாகா

இன்னொரு படம் நாகா. இது அவருக்கே உரிய பேய்க் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. காஞ்சனா படத்தில் வருவது போன்ற தோற்றத்தில் லாரன்ஸும் அவருக்குப் பின்னால் கொடூர பாம்புகள் இருப்பது போலவும் வடிவமைத்துள்ளனர்.

வேந்தர் மூவீஸ்

வேந்தர் மூவீஸ்

இந்த இரு படங்களையும் வேந்தர் மூவீஸ் சார்பில் பி மதன் தயாரிக்கிறார். இந்தப் படங்களுக்கு அட்வான்ஸாக ரூ 1 கோடியை நேற்று படத்தின் தொடக்கவிழா மேடையில் அளித்தார் தயாரிப்பாளர் மதன்.

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

இந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த எஸ்ஆர்எம் குழும நிறுவனர் பாரிவேந்தர், இரு படங்களையும் முறைப்படி தொடங்கி வைத்து வாழ்த்தினார்.

English summary
Raghava Lawrence has announced his two projects Motta Siva Ketta Siva and Naaga on Monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil