விஜய்க்காக விட்டுக்கொடுத்த டைட்டிலை மீண்டும் கையில் எடுத்த லாரன்ஸ்!
Recommended Video

சென்னை : ராகவா லாரன்ஸ் தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தில் ஓவியா,வேதிகா, நிகிதா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.
அடுத்து பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள கதையில் லாரன்ஸ் நடிப்பார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அந்தப் படத்திற்கு 'கால பைரவா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சனா 3
ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில், முனி / காஞ்சனா திகில் படங்களின் வரிசையில் தற்போது 'காஞ்சனா 3' உருவாகி வருகிறது. இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக ஓவியா நடிக்கிறார். படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.

கால பைரவா
இதையடுத்து, லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்திற்கு 'கால பைரவா' என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தையும் லாரன்ஸ் நடித்து, இயக்கி, தனது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார். வரும் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பைரவா
பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படத்திற்கு 'பைரவா' என தலைப்பு வைத்தபோது அந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்த ராகவா லாரன்ஸ் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்
'காஞ்சனா 3' பட வேலைகள் முடிந்ததும் 'கால பைரவா' படத்தை ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். இதையடுத்து இன்னும் இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், இதுபற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











