திருச்சி கிழக்கில் போட்டியில்லை.. விஜய் கட்சிக்கு செல்லப்போவதில்லையா?.. ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!
சென்னை: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், ராகவா லாரன்ஸ் அதுதொடர்பாக மக்களின் அனுமதியை கேட்பதாக முன்னதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், அவர் நடத்திய பிரஸ் மீட்டில் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு நாயை உதாரணமாக வைத்து அவர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியது.
அதன் காரணமாக அரசியலுக்கே போகாதே என மீண்டும் அம்மா சொல்லிவிட்டார் என்றும் ஆனால், அம்மாவை சமாதானப்படுத்தி அரசியலுக்கு வரப்போகும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

ஆனால், அதே சமயம் திருச்சி கிழக்கில் தவெக சார்பில் போட்டியிடுவது தர்மம் ஆகாது என்றும் எந்த கட்சியில் சேரப்போகிறேன் என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என ஒரு நீண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு: ராகவா லாரன்ஸ் தனது வீடியோவில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை வைத்துக் கொண்டு அவருக்கு 20 வருடங்களாக செய்து வரும் உதவிகளை எடுத்துரைத்தார். மேலும், தவறாக பேசக்கூடியவன் நான் அல்ல என்றும் தன்னை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அந்த மாற்றுத்திறனாளி மூலம் முடிவு கட்ட முயற்சித்துள்ளார்.
திருச்சி கிழக்கில் போட்டியில்லை: அரசியலுக்கு வந்த உடனே திருச்சி கிழக்கில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆவது தர்மம் கிடையாது என்றும் விஜய் ஏற்கனவே ஒரு நபரை பார்த்து வைத்திருக்கலாம். அல்லது, அந்த இடத்துக்காக தவெக கட்சியில் உழைத்தவர்கள் பலர் இருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு அந்த இடம் செல்வது தான் சரியானதாக இருக்கும் என்று சொல்லி திருச்சில் கிழக்கில் தவெக சார்பில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
எந்த கட்சியில் சேரப்போகிறார்?: அரசியலுக்கு வரும் முடிவில் ராகவா லாரன்ஸ் உறுதியாக உள்ளார். ஆனால், எந்த கட்சி, யாருடன் இணைந்து அரசியல் பயணம் என்பது தொடர்பாக இன்னமும் எதையும் முடிவு செய்யவில்லை என்றும் விரைவில் அறிவிப்பேன் என்றும் ராகவா லாரன்ஸ் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது போல பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. அண்ணாமலையுடன் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களம் காண முடிவெடுத்துள்ளாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications