Raghava Lawrence: "இதுவரை ரஜினி மட்டும் தான் குரு... இனி அப்படி இல்ல..” ராகவா லாரன்ஸ் ஓபன்!
சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியானது.
சந்தோஷ் நாராயணன் இசையில் 'மாமதுர' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், "இனிமேல் ரஜினி மட்டும் எனக்கு குரு இல்லை" என மனம் திறந்துள்ளார்.

ரஜினி மட்டும் குரு கிடையாது
பாபி சிம்ஹா, சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா திரைப்படம் 2014ம் ஆண்டு வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகியோருடன் நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியானது. சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த விழாவில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா முதல் பாகத்தில் நடிக்காமல் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார். டான் படத்தில் நடித்து சிவகார்த்திகேயனுக்கும், மார்க் ஆண்டனியில் நடித்து விஷாலுக்கும் ஹிட் கொடுத்துள்ளார் எஸ்ஜே சூர்யா. அதேபோல், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளதாக, இது எனக்கு சூப்பர் ஹிட்டாக அமையும் என்றார்.
முக்கியமாக கே பாலச்சந்தர் சார் தான் தன்னை நடிகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவருடன் இணைய வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. நான் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினியை தான் எனது குருவாக நினைத்தது உண்டு. ஆனால், இப்போது அவர் மட்டும் எனது குரு கிடையாது. ரஜினிக்குப் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் எனக்கு குருவாக தெரிகிறார். அதனால் இனிமேல் கார்த்திக் சுப்புராஜ்ஜையும் குரு என்றே அழைப்பேன் என ராகவா லாரன்ஸ் பேசினார்.

அதேபோல், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஹீரோவின் படமாக இல்லாமல், இயக்குநரின் மூவியாக இருக்கும். மாஸ் & கிளாஸ் என எல்லா பக்கமும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தெறிக்கவிடும் என நம்பிக்கைத் தெரிவித்தார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி எனவும் ராகவா லாரன்ஸ் பேசினார். இதுவரை சூப்பர் ஸ்டாரை மட்டுமே குருவாக நினைத்த ராகவா லாரன்ஸ், திடீரென இப்படி மாறிவிட்டாரே என ரஜினியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











