twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டீ விற்று ஆதரவற்றோருக்கு உதவும் இளைஞன்.. மெய்சிலிர்த்த ராகவா லாரன்ஸ்.. ஒரு லட்சம் கொடுக்க முடிவு!

    |

    சென்னை: "இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்" என்று தன்னம்பிக்கை விதைகளை விதைக்கும் இளைஞர் ஒருவரின் பேச்சைக் கண்டு ஆச்சர்யப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அந்த இளைஞருக்கு உதவ முன்வந்துள்ளார்.

    பிச்சைக்காரனாக மதுரையில் சுற்றி வந்த அந்த இளைஞர், பிச்சை எடுத்த காசை வைத்து டீ வியாபாரம் செய்து வருகிறார்.

    அதுமட்டுமின்றி, தன்னை போல, அநாதைகள் யாரும் பசியால் வாடக் கூடாது என்று, அவர்களுக்காக உணவு அளித்தும் வருகிறார்.

    அந்தக் குழந்தைகளை பாதுகாக்கணும்.. நானும் மனுஷிதான்.. சூரியா தேவிக்கு உதவ முன் வந்த நடிகை வனிதா! அந்தக் குழந்தைகளை பாதுகாக்கணும்.. நானும் மனுஷிதான்.. சூரியா தேவிக்கு உதவ முன் வந்த நடிகை வனிதா!

    அநாதையாக

    அநாதையாக

    நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு, அந்த இளைஞர் பற்றிய தகவல் தெரியுமா? என கேட்டுள்ளார். வழிப்போக்கனாக மதுரை ஜங்ஷனுக்கு வந்த அவர், அப்படியே மதுரை வீதிகளில் பிச்சை எடுத்து பிழைத்து வந்துள்ளார். அநாதையாக யாருடைய ஆதரவும் இல்லாத அவர், தன்னைத் தானே உயர்த்திக் கொண்டுள்ள கதை நிச்சயம் பலருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை தரும்.

    பிச்சைக்காரன் டு உழைப்பாளி

    பிச்சைக்காரன் டு உழைப்பாளி

    பிச்சை எடுப்பவர்கள் காலம் காலமாக பிச்சை எடுத்தே வாழ்ந்து வருவார்கள். ஆனால், அதிலும் ஒரு சிலர், வேலை பார்க்க முடியாதா? என்றும் வேலை கிடைத்தால், கடுமையாக உழைத்து முன்னேறி உள்ளதையும் நான் கண்டிருக்கிறோம். அதே போன்று தான் இந்த மதுரையை சேர்ந்த இளைஞரும் பிச்சை எடுத்து அதில் சேர்த்த பணத்தை வைத்து, சைக்கிளில் டீ வியாபாரம் பார்த்து வருகிறார்.

    தர்ம பிரபு

    தர்ம பிரபு

    தானம் செய்யவும், தர்மம் செய்யவும் நம்மிடம் கோடிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பரந்த மனமும் தாராள குணமும் இருந்தால் போதும் என்பதற்கு இந்த இளைஞரே ஒரு மிகப்பெரிய எடுத்துக் காட்டு, டீ விற்று சம்பாதிக்கும் பணத்தில், இவரை போல ஆதரவு அற்ற நபர்களுக்கு, தானே வீட்டில் உணவு சமைத்து இலவசமாக வழங்கி வருகிறார். மேலும், உதவி செய்யவும் ஆர்வத்துடன் இருக்கிறார்.

    ஒரு லட்சம் உதவி

    "இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. "இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்"" என ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

    யார் அவர்

    யார் அவர்

    அந்த இளைஞரின் பெயர் தமிழரசன் என்றும், அவரது தொலைபேசி எண்ணுடன் இந்த ட்வீட்டை பார்த்த ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தி பதிவிட்டு வருகின்றனர். மேலும், எதுவுமே இல்லாத நிலையிலும், பிறருக்கு உழைத்து உதவ வேண்டும் என நினைக்கும் அந்த இளைஞனின் பரந்த மனசை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Raghava Lawrence shared an inspirational video of a youngster, who selling tea and help the orphans with his small savings.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X