அந்த பழக்கத்தை விட்ட ராகவா லாரன்ஸ்.. சந்திரமுகி 2வுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பெயரை கெடுக்காம பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பயம் அதிகமாகவே இருக்கு என பேசியிருந்தார்.

Raghava Lawrence receives huge salary for Chandramukhi 2

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்துக்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

கைகொடுத்த காஞ்சனா: நடன இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த ராகவா லாரன்ஸுக்கு அவர் நடித்த பல படங்கள் ஓடாத நிலையில், பேய் காமெடி படமான முனி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து காஞ்சனா படத்தில் நடித்த அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை காஞ்சனா சீரிஸ் படங்கள் கொடுத்தன.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படங்களை தாண்டி அவர் மற்ற இயக்குநர்களுடன் இணைந்து நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், சந்திரமுகி 2 படம் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்ஸை தூக்கிட்டாங்க: சந்திரமுகி 2 படத்தின் புரமோஷன் முழுவதும் வெறும் ராகவா என்று மட்டும் தான் உள்ளது. லாரன்ஸ் பெயரை டோட்டலாக தூக்கிவிட்டனர். ஆனால், சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து ராகவா லாரன்ஸாகவே வலம் வருகிறார்.

சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்துக்காக ராகவா லாரன்ஸ் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என வடிவேலு பாராட்டி பேசியிருந்தார்.

Raghava Lawrence receives huge salary for Chandramukhi 2

சம்பளம் எவ்வளவு: தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களே 35 கோடி, 50 கோடி என வாங்கி வரும் நிலையில், ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்துக்கு 27 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு 8 முதல் 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரைட்ஸ் கேட்பதில்லை: முன்னதாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்களில் தெலுங்கு ரைட்ஸ், இந்தி ரைட்ஸ் உள்ளிட்டவற்றை சம்பளத்தை தாண்டி கேட்டு வாங்கிக் கொள்வாராம். ஆனால், சமீப காலமாக தயாரிப்பாளர்களின் கஷ்டம் அறிந்து சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறாராம். கூடுதலாக எந்தவொரு குடைச்சலையும் கொடுப்பது இல்லை என்றும் கூறுகின்றனர். சந்திரமுகி 2 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X