ராகவா லாரன்ஸ் புது முயற்சி ..கேரளா முதல்வருக்கு வேண்டுகோள்!
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
Recommended Video

கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து துறையினரும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த பாதிப்பை கட்டு படுத்த அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சினிமா பிரபலங்களும் பெரிய அளவிலான நிவாரணத் தொகையையும் கொடுத்து உதவினார். அதையும் தாண்டி பலர் பொருட்களாகவும், உணவாகவும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு தனிமனித பிரச்சனைகளை அறக்கட்டளை சார்பாகவும் சிலர் செய்கின்றனர். சமீபத்தில் தீப்பட்டி கணேசன் அவர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று வெளியிட்ட வீடியோவை அடுத்து ஓடிவந்து தானாகவே உதவி செய்தார் நடிகர் லாரன்ஸ். அவர் செய்த அந்த உதவி பலராலும் பாராட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் எடுத்திருக்கும் புது முயற்சி அனைவரையும் நெகிழவைத்திருக்கிறது. அதற்காக அவர் எழுதிய வரிகளை பார்ப்போம்
மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள், கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியை கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களை சந்தித்து நிவாரணத்தொகை வழங்கியதையும் பெருமையாக கருதுகிறேன். ஒரு சிறிய வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறேன்.
திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை மருத்துவமனையிலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தமிழகத்தில் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

கொரோனாவால் அவரால் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய ஒன்றரை லட்சம் பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறார். அசோக் என்பவர் தாயை இழந்து கதறுவது குறித்து, மூத்த பத்திரிகையாளர் கொ.அன்புகுமார் அவர்களின் மூலம் எனது உதவியாளர் புவனிடம் இருந்து சம்பந்தபட்ட நபரின் ஆடியோவை கேட்டு மிகுந்த துயருற்றேன். ஒரு சிறிய வேண்டுகோளாக அவரது தாயாரின் உடலை மருத்துவமனையிலிருந்து தமிழகம் எடுத்துச்செல்ல உடனடியாக தாங்கள் அனுமதிக்க வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய பணத்தை ஓரிரு நாளில் நானே செலுத்திவிடுகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன். நன்றி!! என்று குறிப்பிட்டு உள்ளார் நடிகர் லாரன்ஸ்.

பல உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸை பலரும் பாராட்டிவருகின்றனர். இதற்கிடையே கோவில்கள் அனைத்தும் மூடியிருக்கும் இந்த சமயத்தில் மதுபான கடைகள் திறக்க முடியாது என்று கேரளா முதலமைச்சர் கூறி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











