'நான் சென்னை திரும்பும் வரை அமைதி காக்க வேண்டும்'... ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

தன் மீது அவதூறு பரப்புபவர்கள் பற்றி கவலை பட வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

சென்னை: மும்பையில் இருந்து தான் திரும்ப வரும் வரை அமைதி காக்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும், நடிகர் ராகவா லாரன்சுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நிலவி வருகிறது. சீமானுக்கு ஆதரவாக சிலரும், லாரன்சுக்கு ஆதரவாக சிலரும் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் சீமானுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி செயல்பட்டு வருகிறார். லாரன்ஸ் மீது கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்.

இதற்கு லாரன்ஸ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருநங்கைகள் ஒன்றுகூடி லாரன்சுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்தனர்.

இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்புபவர்கள் பற்றி கவலை பட வேண்டாம் என ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது,

வேண்டுகோள்

வேண்டுகோள்

"காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுபவர்களை பற்றி கவலைபடாதீர்கள்.

புகார் வேண்டாம்

புகார் வேண்டாம்

என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள்.

நல்லதையே செய்வோம்

நல்லதையே செய்வோம்

நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம். நல்லதையே செய்வோம்..அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

சென்னை திரும்பியதும்...

சென்னை திரும்பியதும்...

நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதை செய்வார்.

ஆண்டவன் அருள்

ஆண்டவன் அருள்

நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்". இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X