ருத்ரன் ரிலீஸ் தேதியை அறிவித்த ராகவா லாரன்ஸ்; எந்த பெரிய படத்தோட மோத போகுது பாருங்க!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ருத்ரன், துர்கா, சந்திரமுகி 2 என ஏகப்பட்ட படங்கள் நடிகர் ராகவா லாரன்ஸின் லைன் அப்பில் உள்ளன.

மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், பல பெரிய படங்கள் இந்த ஆண்டு படங்களை வெளியிட யோசித்து வருகின்றன.

ருத்ரன் ரிலீஸ் தேதி

ருத்ரன் ரிலீஸ் தேதி

அதே போலத் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தான் தற்போது ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில்

ஏப்ரல் மாதத்தில்

2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி ருத்ரன் திரைப்படம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகும் எனும் சூப்பர் அப்டேட்டை ராகவா லாரன்ஸ் தற்போது அறிவித்துள்ளார். மேலும், வெறித்தனமான ருத்ரன் பட போஸ்டரையும் ஷேர் செய்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தியேட்டரில் தான்

தியேட்டரில் தான்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள ருத்ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் தான் வெளியாகும் என்பதையும் உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். கொரோனா பரவல் காரணமாக சில முன்னணி நடிகர்களே தியேட்டரை விடுத்து ஒடிடி பக்கம் தாவி வரும் நிலையில், தியேட்டர் ரிலீசில் லாரன்ஸ் உறுதியாக இருப்பது தியேட்டர் உரிமையாளர்களுக்கு இனிப்பான செய்தி தான்.

கேஜிஎஃப் உடன் கிளாஷ்

கேஜிஎஃப் உடன் கிளாஷ்

ஏற்கனவே பான் இந்திய திரைப்படமான கேஜிஎஃப் சாப்டர் 2 இதே தேதியில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அந்த படத்துடன் எதிர்த்து போட்டியிட முடிவு கட்டி ருத்ரன் பட ரிலீஸை அறிவித்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகமே தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல

அதுமட்டுமல்ல

கேஜிஎஃப் மட்டுமல்ல ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களும் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட மற்ற மொழி படங்களும் தமிழ் புத்தாண்டை டார்கெட் செய்து வெளியாக காத்திருக்கும் நிலையில், யாருக்கும் அஞ்சாமல் தனது படத்தின் ரிலீஸ் தேதியை முதல் ஆளாக அறிவித்து இருக்கிறார் லாரன்ஸ்.

நடிப்பில் பிசி

நடிப்பில் பிசி

காஞ்சனா 4 படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த படம் இப்போதைக்கு ஆரம்பிப்பதாக தெரியவில்லை. துர்கா, சந்திரமுகி 2 என மற்ற இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகி உள்ள லாரன்ஸ் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இயக்குநரான தயாரிப்பாளர்

இயக்குநரான தயாரிப்பாளர்

இயக்குநர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பக்கம் தயாரிப்பாளர்கள் ஆகி வரும் நிலையில், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட மெகா ஹிட் படங்களை தயாரித்த கதிரேசன் தான் லாரன்ஸ் மாஸ்டரின் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஜிவி பிரகாஷ் இசை

ஜிவி பிரகாஷ் இசை

பொல்லாதவன், ஆடுகளம் என இவர் தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் தான் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார்.

பேட்ட சாயல்

பேட்ட சாயல்

ரஜினிகாந்தின் பேட்ட சாயலில் இந்த போஸ்டர் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குருநாதர் ரஜினி போலவே மாஸ் காட்டுறீங்க தலைவா என்றும் லாரன்ஸின் ருத்ரன் பட போஸ்டருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X