கொரோனா பிரச்னை முடிந்ததும் தொடங்குது ஷூட்டிங்.. ஹீரோவாக அறிமுகமாகிறார் ராகவா லாரன்ஸின் தம்பி!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின். இவர் காஞ்சனா 2 படத்தில் ஒரு பாடலுக்கு லாரன்ஸூடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்.
இதையடுத்து அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த கடந்த சில வருடங்களாகக் கதை கேட்டு வந்தார்.

இந்நிலையில் எல்வின் பிறந்த நாளான இன்று, நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுபற்றி ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
இன்று என் தம்பியின் பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன். அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவன் கனவு நடிகராக வேண்டும் என்பது. அது இப்போது நிறைவேற போகிறது. நாங்கள் பல நாட்கள் காத்திருந்தோம். தற்போதுதான் ஒரு நல்ல திரைக்கதை அமைந்துள்ளது.
ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிக்கும் படத்தில் எல்வின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ராஜா என்பவர் இயக்க உள்ளார். தற்போது நிலவிவரும் கொரோனா சூழ்நிலை முடிந்த பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அனைவரும் தங்களின் நல்லாசியையும், ஆதாரவையும் எனது தம்பிக்கு அளிக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











