Chandramukhi 2 :மைசூரில் எடுக்கப்படும் சந்திரமுகி 2 சாங் சூட்டிங்.. யாரு டான்ஸ் மாஸ்டர் தெரியுமா?
மைசூர் : ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2.
முதல் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா நயன்தாரா மற்றும் பிரபு ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், படத்தை பி வாசு இயக்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் நிறைவடைந்தது.

மைசூரில் எடுக்கப்படும் சந்திரமுகி 2 படத்தின் சாங் சூட்டிங் : நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தில் ஸ்டைலான ரஜினிகாந்த், மிரட்டலான ஜோதிகா, அழகான நயன்தாரா, அட்டகாசமான வடிவேலு, சாந்தமான பிரபு என வித்தியாசமான கேரக்டர்களின் கலவையாக கொடுத்திருந்தார் இயக்குநர் பி வாசு. மலையாளப் படத்தின் ரீமேக்காக உருவான போதிலும், தமிழுக்காகவும் ரஜினிக்காகவும் படத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கணா ரனாவத், ராதிகா, லட்சுமி மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தாம்தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ள கங்கணா ரனாவத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். நடிகை ராதிகாவிற்கு இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது படம் குறித்த அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் பிரம்மாண்டமான பாடல்காட்சி தற்போது மைசூரில் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுவரும் இந்தப் பாடல் காட்சியை பிரபல டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் கொரியோகிராப் செய்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக ஏராளமான துணை நடிகர்களுடன் இந்தப்பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு கடந்த மே மாத இறுதியில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக வெளியான ரஜினியின் சந்திரமுகி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போதுவரை ரசிகர்களின் பேவரைட் படங்களின் வரிசையில் இந்தப் படத்திற்கு முக்கியமான இடம் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











