சந்திரமுகி-2 பூஜையுன் ஆரம்பம் ..அட வடிவேலு கரெக்டா ஆஜராகிட்டாரே..ராதிகாவுக்கு என்ன ரோல்?அப்ப நாயகி?

மைசூரு : நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ல் வெளியானது சந்திரமுகி படம்.

Recommended Video

Lawrence படத்தில் Trisha-வை தொடர்ந்து list-ல் சேர்ந்த Lakshmi Menon Kollywood | Filmibeat Tamil

இந்தப் படத்தை இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார். ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் இந்தப் படத்திற்கு எப்போதுமே இடமுண்டு.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகவுள்ளது. பி வாசுவே இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ல் வெளியான படம் சந்திரமுகி. ரஜினி தன்னுடைய கேரியரில் சிறப்பான பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. படத்தில் மனநல மருத்துவராக நடித்திருந்தார் ரஜினிகாந்த்.

மனநல மருத்துவராக ரஜினி

மனநல மருத்துவராக ரஜினி

மனநல பிறழ்வால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பனின் மனைவியை அதிலிருந்து மிகவும் புத்திசாலித்தனமாக அவர் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்பட்டது. இந்தக் கேரக்டரில் தனக்கே உரிய காமெடி சென்சுடன் நடித்திருந்தார் ரஜினி. அவருடன் வடிவேலுவும் இணைந்துக் கொண்டார். படம் காமெடிக்காகவும் சிறப்பாக பேசப்பட்டது.

சந்திரமுகி 2 படம்

சந்திரமுகி 2 படம்

இந்தப் படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போதுவரை அனைவருக்கும் பிடித்த படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. லைக்கா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை பி வாசுவே இயக்கவுள்ளார்.

நாயகனாக ராகவா லாரன்ஸ்

நாயகனாக ராகவா லாரன்ஸ்

படத்தின் நாயகனாக ரஜினிக்கு பதில் லாரன்ஸ் இணைந்துள்ளார். அவருக்கு த்ரிஷா அல்லது லஷ்மி மேனன் ஜோடியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் மைசூருவில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதில் பி. வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் ராதிகா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

2வது இன்னிங்சில் வடிவேலு

2வது இன்னிங்சில் வடிவேலு

தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ளார் வடிவேலு. அவரது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து மாமன்னன் உள்ளிட்ட படங்களில் அவர் இணைந்துள்ளார். மீண்டும் பழைய உற்சாகத்துடன் அவர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். இதனிடையே இந்தப் படத்தில் ராதிகாவும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரது ரோல் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் ஆர்வம் எழுந்துள்ளது.

ஹாரர் த்ரில்லர் படம்

ஹாரர் த்ரில்லர் படம்

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங், தற்போது தொடர்ந்து மைசூருவில் நடைபெறவுள்ளது. படத்திற்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படப்புகழ் கீரவாணி இசையமைக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் சந்திரமுகி 2 படம் உருவாகவுள்ளதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. முதல் பாகத்திலேயே, மிரட்டலான காட்சி அமைப்புகள், திரைக்கதையுடன் படத்தை கொடுத்திருந்தார் பி வாசு. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X