சந்திரமுகி 2 படத்தின் புது புகைப்படம்.. காத்திருக்கும் புது ட்விஸ்ட்.. எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை : சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
மணிசித்திரதாழ் படத்தின் ரீமேக்கான சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சந்திரமுகி :
சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பு :
பிரபல பாலிவுட் நடிகை நடிகை கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க உள்ளார்.

வைகை புயல் வடிவேலு :
இதில் ரஜினிக்குப் பதில் ராகவா லாரன்ஸ், ஜோதிகாவிற்குப் பதில் கங்கனா ரணாவத் நடிக்கின்றனர். மீண்டும் சினிமாவில் எண்ட்ரியாகி உள்ள வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்கைத் திணற அடிக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
வித்தியாசமான புகைப்படம் :
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் மூக்கில் கடுக்கன் அணிந்து வித்தியாசமான கெட்டபில் ராகவா லாரன்ஸ் இருக்கிறார். இந்த புகைப்படம் வெளியானதை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி உள்ளது.
பாசமான பரிசு :
மேலும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ராதிகாவிற்கு தங்க மோதிரம் ஒன்றை ராகவா லாரன்ஸ் பரிசாக வழங்கியுள்ளார். இதனால் ராதிகா இன்ப அதிர்ச்சி அடைந்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











